|
164 |
நெடுநிலைக் கலியே வணிகர் சாதி
கடவுளர் சனிபுதன் கருதிய நாளே
யநுடமுத லாறே யோரை துலாங்குட
மிதுனஞ் சந்தனம் விரைபூச் சண்பகம்
பொன்னிற நிறனே நன்னில நெய்தல். |
|
|
(3) |
|
(வஞ்சிப்பா.) |
| 165 |
எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி
நாளே யவிட்ட முத1லேழ் நாளா
மிடபங் கன்னி மகர மோரை
சார்ந்த விரையே தண்ணறுங் கலவை
யேந்திய போதே யின்னறு நீல
நீல 2நிறனே நெடுநில மருதம். |
|
|
(4) |
| 166 |
நால்வகைப் பாவிற்கு மேலோர் வகுத்த
வினங்களும் பெறுமென நினைந்தனர் கொளலே. |
|
|
(5) |
| 167 |
நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின்
பால்வகைப் படுமே 3முதலன விரண்டின்
புணர்ச்சி மருட்பாப் பொருந்தா வருணம். |
|
|
(6) |
| 168 |
நாளு மோரையு நலத்தகு நிலனும்
விரையுஞ் சாதியு நிறனுங் குணனு
4முரைபெறும் பாநரர்க் குடைய வென்ப. கல்லாடனார். |
|
|
(7) |
| 169 |
அந்தச் சாதிக் கந்தப் பாவே
5தந்தனர் புலவர் தவிர்ந்தன வரையார்.
|
|
|
(8) |
| 170 |
வௌ¢ளையு மகவலும் விருத்தமுங் கலியும்
வஞ்சியு மெஞ்சா மங்கலம் பொருந்தும். |
| |
(9) |
|
| [பி-ம்.] 1 லே ழாகு. 2 நிறமே நிலமே
மருதம். 3 முதல. 4 முரை பெறு பாநான் குடைய; முரைபெறு நான்குமுடைய. 5
யிசைந்தன புலவர் தவிர்ந்தன வரையார். |