பக்கம் எண்: தேடுக
பக்கம் : 2 பன்னிருபாட்டியல்

7

திருமா லரனே திசைமுகன் குமரன்
மரபிற் படைத்தன மறையவர் சாதி. பரணர்.
 

 

8

இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன
துன்னருஞ் சிறப்பின் மன்னவர் சாதி.
             அவை:- த, ந, ப, ம, ய, ர.
 

(3)

9

இந்திர னிரவி சோமனிம் மூவர்
தந்த வெழுத்தே யரசர் சாதி. பரணர்.
 

(4)

10

திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன
வணிமிகு சிறப்பின் வணிகர் சாதி.
             அவை:- ல, வ, ற, ன.
 

(5)

11

இயம னிதிக்கோ னென்றிவர் படைத்தன
வசைதீர் சிறப்பின் வணிகர் சாதி.
             இது வேறொரு மதம்.
 

(6)

12

கூற்றுவன் படைத்தன கூற்றன விரண்டு
மேததிய மரபிற் சூத்திரர் சாதி.
             அவை:- ழ, ள.
 

(7)

13

இயமன் படைத்த விருவகை யெழுத்துந்
துகடீர் மரபிற் சூத்திரர் சாதி. பரணர்.
             இதுவும் வேறொரு மதம்.
 

(8)

14 ஒற்றுமைக் காலையும் வேற்றுமைக் காலையும்
பிறவியும் வருணமும் பெறுமென மொழிப.
 

(9)

15 உயிர்மெய் போல வொற்றுமிம் முறைபெறும்.
 

(10)

16 உயிர்மெய் வழக்க மெய்வழக் காகும்
வேற்றுமைக் கண்ணே யென்றார் பிறரும்.
 

(11)

17 நால்வகை வருணத் தோர்க்கு நால்வகை
யியம்பு மெழுத்தை யியம்புவர் முதன்மொழி
மற்றவை மயங்கினும் வரையா ராண்டே.
 

(12)

18 மக்கட் சதி நான்கிற்கும் வகுத்த
தத்தஞ் சாதி யெழுத்தே யவரவர்க்கு
வைத்துமுன் னெடுப்பி னதுமாண் புடைத்தே
மயங்கினும் வரையார் பயன்பட வரினே. இந்திரகாளியார்.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்