பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 3
 

எழுத்தியல் 3

 

3-கதி.

19

 வானவர் மக்க ணரகர் விலங்கென
வூனமில் கதியே யொருநான் காகும்.
 

(1)

20

 கதியெனப் படுபவை காண்டக விரிப்பிற்
றேவர் மக்க ணரகர் விலங்கென
மேவிய கதிக ளீரிரண் டாகும். இந்திரகாளியார்.
 

(2)

21

 தேவர் மக்க ணரகர் விலங்கென
மேவிய நான்கே யெழுத்தியல் கதியே. பரணர்.
 

(3)

22

அவற்றுள்,
உயிர்க்குறில் வல்லின மீற்றெழுத் தொழியப்
பயிர்ப்புறு வானவர் கதியெனப் படுமே.
 

(4)

23

 தேவர் கதியே தெரியுங் காலை
அஇ உஎ கசட தபவே. பரணர்.
 

(5)

24

 மக்கட் கதியே நெட்டுயிர் நான்கொடு
மிக்க சிறப்பின் ஙஞண நமவே.
 

(6)

25  அவைதாம்,
ஆஈ ஊஏ ஙஞண நமக்கள்
மேவிய மக்கட் கதியென விளம்புவர்.
 

(7)

26 ஒழிந்த ஐஔ ஆய்த வெழுத்துங்
கழிந்த வளனவு நரகர் கதியே.
 

(8)

27

 ஒ ஓ விரண்டும் யரல ழறவெனத்
தொக்கன வைந்தும் விலங்கின் கதியே.
 

(9)

28

மன்னுவர் தேவர் மக்கள் செய்யுளுண்
மன்னா விலங்கொடு நரகர் கதியே.
 

(10)

29

விலங்கு 1நரகும் விலங்கின வென்ப. இந்திரகாளியார்.
 

(11)

30

1நரகும் விலங்கும் வரைவ ரீண்டே
தேவரு மக்களு மேவின பாட்டே.
 

(12)


  [பி-ம்.] 1 நரகரும்
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்