|
188 |
ஒன்பது பதினொன் றென்பது காப்பே. பரணர். |
|
|
(17) |
| 189 |
அகவல் விருத்தமுங் கட்டளை யொலியுங்
கலியின் விருத்தமுங் கவின்பெறு பாவே. |
|
|
(18) |
| 190 |
பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத்
தௌ¢ளிதிற் செப்பும் புலவரு முளரே. |
|
|
(19) |
| 191 |
முதற்க ணெடுக்கு மகவல் விருத்த
மெழுத்தின் பகுதி யெண்ணினர் கொளலே. |
|
|
(20) |
| 192 |
நீணெறி யுவகை 1யாண்மக விற்கே
ழைம்மூ வாண்டே 2யவர்முதற் சாற்றல். |
|
|
(21) |
| 193 |
பொங்குகதி ரிளம்பிறை புலியின் சிறுபறழ்
குஞ்சரக் குழவி கோளரிக் குருளை
யடலிள விடையே யாறிரண் டாண்டி
னிடைநிக ழுவமை யென்மனார் புலவர். |
|
|
(22) |
| 194 |
பெண்மக விற்குப் பேசு மிடத்து
மானின் கன்று மயிலின் பிள்ளை
தேனி னின்பந் தௌ¢ளாத் தேறல்
கரும்பி னிளமுளை கல்லாக் கிள்ளை
யிளந்தளிர் வல்லி யென்றிவை யெல்லாம்
பெய்வளை மகளிர்க் கெய்திய வுவமை. |
| |
(23) |
| 195 |
இளங்3கதிர்த் திங்க ளெல்லார்க்கு முரித்தே.
பரணர். |
| |
(24) |
| 196 |
அவைதாம்,
பிள்ளையைப் பாடலிற் பிள்ளைப் பாட்டாய்ப்
பிறப்பே யோகை காப்பே வளர்ச்சி
யச்ச முறுத்த லுடன்செங் கீரை
தால்சப் பாணி முத்தம்வா ரானை
யம்புலி சிற்றில் குழமக னூச |
| |
(25) |
|
|
[பி-ம்.] 1 லே ழாகு. 2 நிறமே நிலமே
மருதம். 3 முதல. 4 முரை பெறு பாநான் குடைய; முரைபெறு நான்குமுடைய.
5
யிசைந்தன புலவர் தவிர்ந்தன வரையார். |