|
|
லென்றனர் பிறவுந் தொன்னெறி மரபிற்
றத்தந் தொழிற்குத் தகுவன புகற
லெத்திறத் தோர்க்கு முரிய வென்ப1
கொச்சகக் கலியொடு நெடுவெண் பாட்டே. |
|
|
(25) |
| 197 |
நெடுவெண் பாட்டின் முந்நான் கிறவாது
தொழிலொடு குறித்துத் தோன்றுஞ் செய்யு
ளொன்றுமூன் றைந்தே ழொன்பான் பதினொன்
றென்றிவை யிவற்றி 2னிகந்தன விழுக்கே. |
|
|
(26) |
| 198 |
பிறப்பே யோகை பேணுறு வளர்ச்சி
சிறைப்பட வச்ச முறுத்தலொடு நான்கு
மாரா யுங்கா லைந்துமூன் றிடையா
யோரே ழொருபொருட் குயர்ச்சியிழி பொன்றே.
இந்திரகாளியார். |
|
|
(27) |
|
3.-வேந்தன் குடைமங்கலம். |
| 199 |
முன்னீ ரடியிலுங் குடைத்தொழி லியம்பியும்
பின்னீ ரடியிற் றனிநிலை யிரட்டியுங்
கொற்றவற் 3புகழ்ந்து குடையென முடிக்கு
நற்றிற நேரிசைக் குடைவெண் பாட்டே.4 |
|
|
(28) |
|
| |
[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்க்குமாறு, |
|
|
| |
‘கொச்சகக் கலியொடு கலிவெண் பாட்டே
நெடுவெண் பாட்டின்முந் நான்கிற வாது
நேரடி நெடிலடி கழிநெடி லடியெனு
மூவகை யடியி னீரிரண் டாகிக்
கோவை யொப்பது கொச்சகக் கலியே’. |
| |
(28) |
|
|
என்று ஒரு
சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.] |
|
|
2 னிழிந்தன. 3 புணர்ந்து.
4 இதற்குப்பின் சேர்க்குமாறு, |
| |
‘கொடைமங் கலப்பொருள் குறித்த நேரிசைத்
தொடையமை வௌ¢ளை சுடர்முடி சூடிய
மொய்கழன் மன்னைமுற் பாடுங் கலியென
மையறு புலவர் வகுத்துரைத் தனரே’. |
| |
(32) |
|
என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுளது. [ச-பி.] |