பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 29

200  

அதுவே,
குடைச்சொற் சிந்தடி யீற்றில்வைத் தந்தக்
குடைச்சொல் 1லாதி குறளகத் தடக்கி
யீற்றய லடியினு மீற்றினு மிறைவனைப்
போற்றிப் புகழ்ந்து புகறல் வேண்டும். இந்திரகாளியார்.
   
201   ஒட்டிய குடைப்பொரு ளுரைக்கு நேரசை
கட்டளை யாகுதல் கடனென மொழிப.
 

(30)

202   கட்டளை யென்பது கருதுங் காலை
யீற்றடி யொழிய வேனைமூன் றடியும்
பாற்படு மெழுத்தின் பகுதியொப் பதுவே.
 

(31)

203   இதற்கே யாமெழுத் தெண்ணுங் காலைக்
குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமு
2மொற்று மொழித்துயி ருயிர்மெய்யுங் கொளலே.
 

(32)

204   மோனையு மெதுகையுந் தொடையென மொழிப.
 

(33)

205   சாற்றியமா றொத்த றனிமை மிகுதிசமம்
போற்றுமுடம் பாடு புலனுண்மை - யேற்றுந்
தலைப்பாடு பாதி தருகொடை பத்து
நிலைப்பாடு நேரசையா நேர்.
 

(34)

[இஃது நேரசை தனிமைக்கண் வந்தது.]
4.- ஒருபோகு.

206   தன்மை முன்னிலை படர்க்கையுட் டன்மை
யொழித்திரு வகையு ளொன்றாற் கடவுட்
பழிச்சு மொருபோ கிருமூன் றுறுப்பு
மமைந்தொருங் கியலு நயந்திகழ் கலியுள்
வண்ணகம் போதினு மெண்ணே போதினு
மோதிய வுறுப்பாற் பேர்புகன் றனரே.
 

(35)


 [பி-ம்.] 1 லாதிக் குளகத் தடக்கி. 2 மொற்றுமாய் தமுமொழித் துயிர்மெய்யுங்.
 
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்