பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 45

இனவியல்

 

யினமொழி நாட்டி யகவல் விருத்த
மொருப தியற்றுத லாழியோன் பிறப்பே1.

 

(127)

30-அட்டமங்கலம்.

299  

ஒருவனைக் காக்கவென் றிறைவனை யேத்திய
வெண்வகை யகவல் விருத்தம் புணர்த்த
னண்ணிய வட்ட மங்கல மென்ப.
 

(128)

300  

இறைவனை யேத்திய வெண்வகை மங்கல
மறிதரும் பாவே யகவல் விருத்தம். சேந்தம்பூதனார்.
 

(129)

31-இல்லறவௌ¢ளை.

301  

கலைதரு வண்ணமும் வௌ¢ளையு மொன்பா
னிலைபெறப் புணர்ப்பினஃ தில்லற வௌ¢ளை.
 

(130)

[இதனுள், கலைதருவண்ணம் என்றதனால் வெண்கலிப்பா ஒன்றானும், நிலைபெற என்றதனாற் சந்தவகை யொன்பதினாலும் வெண்பா ஒன்பதினாலும் பாடுவாருமுளர்.]

32-மங்கலவௌ¢ளை.

302  

சந்தமும் வௌ¢ளையுந் தருவன கற்புடை
மங்கல வௌ¢ளை வருவன வொன்பான்.
 

(131)

303  

 அதுவே,
வெண்கலி யானும் 2வருதற்கு முரித்தே. மாபூதனார். 
 

(132)

304  

 சந்தமும் வௌ¢ளையுந் தனித்தனி புணர்த்தலு
மந்தமில் புலவ ராமென மொழிப. சீத்தலையார்.
 

(133)

33-தாரகைமாலை.

305  

இரண்டு பொருள்புண ரிருபத் தெழுவகைச்
சீரிய பாட்டே தாரகை மாலை.
 

(134)


     [பி-ம்.] 1இதற்குப்பின்சேர்த்துக்கொள்ளும்படி,
  ‘போற்றி யொருவன் புறங்காப்பு...க்கு
மாற்றல் சான்ற வகவல் விருத்தம்’.
 

(108)

  ‘வெண்கலி தானும் வருதற்கு முரித்தே’.
 

(111)

     என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன.
       2 வருதலு. [ச-பி.]
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்