|
பன்னிருபாட்டியல். |
|
34-செந்தமிழ்மாலை. |
|
306 |
எப்பொரு ளேனு மிருபத் தெழுவகை
செப்பிய 1நெறியது செந்தமிழ் மாலை. |
|
|
(135) |
|
[பாவானும் இனத்தானும் 2பாடுவாரு
முளர். நான்கு முதற்பாவானாதல் ஒருபாவி னினத்தானாதல் 3பாடுக
என்பாருமுளர்.] |
|
35-தாண்டகம். |
|
307 |
மூவிரண் டேனு மிருநான் கேனுஞ்
சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டக மவற்று
ளறுசீர் குறியது நெடியதெண் சீராம். |
|
|
(136) |
|
308 |
அறுசீ ரெண்சீ ரடிநான் கொத்தங்
கிறுவது தாண்டக மிருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே. பல்காயனார். |
| |
(137) |
|
309 |
மங்கல மரபின் மானிடர் கடவுளர்
தம்புக ழுரைப்பது தாண்டக வகையே. |
| |
(138) |
|
310 |
தாண்டக மானிடர் கடவுளர்க் குரித்தே.
மாபூதனார். |
| |
(139) |
|
311 |
அடிவரை நான்கும் வருமெழுத் தெண்ணி
நேரடி வருவது தாண்டக 4மாகும். சீத்தலையார். |
| |
(140) |
36-பதிகம். |
|
312 |
ஆசிரி யத்துறை யதனது விருத்தங்
கலியின் விருத்த மவற்றி னான்கடி
யெட்டின் காறு முயர்ந்த வெண்பா
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்
பாட்டுவரத் தொடுப்பது பதிக மாகும். |
| |
(141) |
|
37-சீர்மெய்க்கீர்த்தி. |
|
313 |
சீர்நான் காதி யிரண்டடித் தொடையாய்
வேந்தன் மெய்ப்புக ழெல்லாஞ் சொல்லியு
மந்தத் தவன்வர லாறு சொல்லியு |
|
|
[பி-ம்.] 1
வகையது. 2 பாடுவாருளர். 3
பாடுவாருமுளர்.
4 மென்ப. |