பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 47

இனவியல்

  

மவளுடன் வாழ்கெனச் சொல்லியு மற்றவ
னியற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத்
திறம்பட வுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி.1
 

(142)

314  

2நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தியி னந்த
முரையாய் முடியு மெனவுரைத் தனரே. கோவூர்கிழார்.
 

(143)

38-செருக்களவழி.

315  

 செய்த நிலைபெறு புகழ்புனை
நேரிசை வெண்பா வின்னிசை வெண்பாப்
பஃறொடை வெண்பா மறக்கள வழியே.
 

(144)

316  

நேரிசை யின்னிசை பஃறொடை வெண்பா
போரின் களவழி புகலப் படுமே.
 

(145)

39-மறக்களவஞ்சி.

317  

குறள்சிந் தளவடி யகவ லடிவிராஅய்
வஞ்சிச் செய்யுளின் மன்னவர் மறக்கள
மெஞ்சா துரைப்பது மறக்கள வஞ்சி.
 

(146)

318  

இயங்குபடை மன்ன ரிகற்களம் புகழ்ந்த
மயங்கியல் வஞ்சி மறக்கள வஞ்சி.
 

(147)

40-செருக்களவஞ்சி.

319  

விருத்தவகை பத்தான் விளம்பு மதனைச்
செருக்கள மெனவே செப்பினர் புலவர்.
 

(148)

41-ஆற்றுப்படை.

320  

புரவலன் 3பரிசில் கொண்டு மீண்ட
விரவலன் வெயிறெறு மிருங்கா னத்திடை
வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்
புரவல னாடூர் பெயர்கொடை பராஅ
யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை.

(149)


     [பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக் கொள்ளும்படி,
‘மதிபுரை வெண்குடைக் கீழரி யணைமிசை
விதியினி திருந்தென மெய்பெற நாட்டே’.
 

(122)

     என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது.
  2 நிரைபெறு. 3 பரிசு. [ச-பி.]
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்