பக்கம் எண்: தேடுக
பக்கம் : 48 பன்னிருபாட்டியல்

பன்னிருபாட்டியல்.

321  

ஓங்கிய வதுதா னகவலின் வருமே.
 

(150)

322  

புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே.
 

(151)

42-கண்படைநிலை.

323  

காலைபகன் மாலை யாழ்முறை யறத்திய
லமைச்சிய லரசிய லேனை யியலிசை
1நாட கத்திய லோடு நான்மறை
முறையே யெய்தினை யூழி வாழி
யினிய மகளிரோ டின்பத்துயில் கொள்கென்
றிங்ஙன முரைப்பது கண்படை யாகும்.
 

(152)

43-துயிலெடைநிலை.

324  

கண்படை மன்னவர் முன்னர்த் தண்பதம்
விடிய லெல்லை யியல்புறச் சொல்லித்
தந்த திறையருந் தாராத் திறையரு
2மேத்தி நின்மொழி கேட்டினி தியங்க
வேண்டின ரித்துயி லெழுகென விளம்பி
னதுவே மன்னவர் துயிலெடை நிலையே.
 

(153)

44-விளக்குநிலை.

325  

துளக்கமின் மன்னர்க் காம்விளக் குரைப்பது
விளக்கு நிலையென வேண்டினர் புலவர்.
 

(154)

45-கடாநிலை.

326  

கொற்றவை தனக்குக் கொற்றவ ரெறியுங்
கடாநிலை யுரைப்பது கடாநிலை யாகும்.
 

(155)

327  

வடாஅதுறை கன்னிக்கு மன்னவ ரெறிந்த
கடாநிலை யுரைப்பது கடாநிலை யாகும்.
 

பெருங்குன்றூர்கிழார்.


     [பி-ம்.] 1 நாடகத் தியலொடு நான்கு முறைமுறை, யெய்தினை யூழிவாழி யினிய, மகளிரொ டின்பத் துயில்கொள்கென் றின்ன, உரைப்பது கண்படை யாகுமென்ப. 2 மேற்ற; மேத்திநின் மொழிகேட் டினிதியங்க வேண்டின, ரித்துயி லெழுகென வியம்பி னதுவே, மன்னவ ரின்பத் துயிலெடை நிலையே. [ச-பி.]

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்