பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 49

இனவியல்

46-யாண்டுநிலை.

328  

வையக மன்னவன் 1மன்னுக பல்யாண்
டெய்துக வென்ப தியாண்டுநிலை யாகும்.
 

(157)

     [இது பெரும்பான்மை நேரிசைவெண்பாவாற் பாடப்பெறும். சிறுபான்மை எல்லாப்பாவானும் பாடப்பெறும்.]

47-பறைநிலை.

329  

காவல ரினிதுறத் தேவர்காத் தளிக்கெனக்
கடவுளர் விழவினுங் கதிர்முடி விழவினு
நாடு நகரமு நலம்பெற வியம்பி
வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய
மொழிவரத் தொடுப்பது பறைநிலை யாகும்.
 

(158)

48-அந்தாதித்தொகை.

330  

வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருளிற்
பண்பா வுரைப்பதந் தாதித் தொகையே.
 

(159)

49-புறநிலை, வாயுறை, செவியறிவுறூஉ.

331  

புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத்
திறமையின் மருட்பாச் செய்யுளின் வருமே.
 

(160)

50-பாதாதி.

332  

அகவடி யுகிரே விரல்புற வடியே
பரடே கழலே கணைத்தாண் முழந்தாள்
குறங்கே யல்குல் கொப்பூழ் வயிறதன்
வரையே யிடையே மயிரி னொழுக்கே
முலையுகிர் விரலே முன்கை யங்கை
தோளிணை கழுத்தே முகநகை செவ்வாய்
மூக்கே கண்ணே காது புருவ
நுதலெனு மாறைந் துறுப்புட னிரண்டும்
பாத மாதியா வேண்டுதல் புணர்ப்பினஃ
தோதிய பாத மாதியா மென்ப.
 

(161)


     [பி-ம்.] 1 மன்னிய பல்யாண், டெய்துவ னென்ப.
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்