52. | ஈருட லோருட லாகவே இறுக வணைத்தினி தின்புறும் காருட லோதி மடந்தையீர் கனக நெடுங்கடை திறமினோ. | (35) | | | | 53. | கூடு நெடுங்கன வதனிலே குற்ற மிலானுட னுற்றிடா தூடு மனந்தனொ டூடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. | (36) | | | | 54. | ஊரு மலாலுயர் தேயமும் உறுகுல மும்முற வின்முறை யாரு மிலானொடு கூடியே இன்புறு வீர்கடை திறமினோ. | (37) | | வேறு | | 55. | ஊரும் படைத்ததொரு மானிடப் படிவமும் ஒன்றியே வாழுநா டன்றியே யுயர்திருப் பேரும் படைத்தசிவ ஞானதே சிகனருட் பெருமைபா டக்கபா டந்திறந் திடுமினோ. | (38) | | வேறு | | 56. | செறியு மலவிருள் பறிய வருசிவ ஞான தேசிக தினகரன் அறியு மறிவுற வருளு நெறியினை அறைய வணிகடை திறமினோ. | (39) | | வேறு | | 57. | தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ. | (40) | | | | 58. | தெரிக்குஞ் சீர்த்திச் சிவஞான தேசி கன்றாள் சிரத்தணிந்து பரிக்கும் பாச வதைப்பரணி பாடக் கபாடந் திறமினோ. | (41) |
52. கார் உடல் ஓதி - கரிய ஆணவத்தைப் பகைக்கும் மெய்ஞ்ஞானம் ; மேகத்தைப் பகைக்கும் கூந்தல். “அழுந்த வாகம திரண்டு மொன்றுற வழிவி லானொடு தழுவி” (அஞ்ஞவதைப்) ; “ஈருருவை யோருருவா யிசைக் கின்ற தெனதம்பே” (372) என்பர் பின். 53. மனம் தன்னொடு - மனத்தோடு. 55. வாழு நாடன்றியே உயர் - வாழும் நாட்டில் மட்டுமன்றி எங்கும் ஓங்குகின்ற. 57. தேசம் - ஒளி. பி - ம். ‘நேசம் பரித்த சிவஞான நிகழ்தேசிகன்’ 58. பரிக்கும் - தாங்கிய. |