பக்கம் எண் :

  

3. காடு பாடியது

59.

நெடிய கானமு நிழலென வழல்வது
      நெறியு ளத்து நினையினு மெரிவது
கொடிய கானமொன் றுளதத னிலையினிக்
      கூறு கின்றது தேறுக தேறுக.

(1)
 

வேறு

 

60.

அடுவிலங் கல்லவ ரறிஞரே யாதலால்
      அவரலா தவர்விலங் காதலா லவைகள்வாழ்
கடுநிலஞ் சுடுமழற் கதுவவெந் தெரிதவழ்
      கதிமயங் கியநெடுங் கவலைகூர் கானமே.

(2)
   

61.

அன்னவவ் வடவியின் கொடுமையை யளவிடா
      யாவரே கூறுவார் தேவரே யாயினும்
துன்னவவ் வடவிதா னெளியதோ வடவையச்
      சூடுபட் டல்லவோ தொடுகடற் படிவதே.

(3)
 

வேறு

 

62.

தணிகிலா வருகர்தம் பிண்டியுந் தேரர்தம்
      தழைகுலா மரசுமைந் தருவுமே பொருவுமே
அணுகிலா நீளிடை யடையவுஞ் சோலையாய்
      அடையவே யடையவே யழலுமவ் வடவியே.

(4)

59. கானம் - பாலைநிலம். நினையினும் எரிவது : “நினையின்வே முள்ளமும்” கம்ப. தாடகைவதைப்.

பி - ம். ‘நெறிநிறைந்து’

60. அவைகளென்றது கல்லாதவர்களாகிய விலங்குகளை ; “விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல், கற்றாரோ டேனை யவர்” என்ற குறள் இங்கே அறிதற்குரியது. கதி - தேவகதி முதலியன, வழி. கானம் கடுநில மென முடிக்க.

62. பிண்டி - அசோகு. தேரர் - புத்தர். அடையவும் - முற்றவும். “அணிகொ ளும்பர் தருவுநே ரருகர் பிண்டி மரனுநேர், கணிக பங்க ரரசு நேர் கடிய கான வனலிலே” (அஞ்ஞவதைப். ) ; “தரையினின்ற வகையெனும் பர் தருவுமில்லை சுகதர்தம், அரசுமில்லை யுரைசெயந்த வனலிலெங்கு மழியுமே”, “அழியுமிந்த வனலினெந்த வுலகுமென்ற வருகர்தம், மொழியு மந்த வருகர்பிண்டி மரமுமில்லை முடிவிலே” மோகவதைப்.

பி - ம். ‘இவ்வடவியே’