பக்கம் எண் :

12 பாசவதைப் பரணி

63.

கனவினு மருளிலா நொதுமலா ரருளுழிக்
      காணினும் வேலியாய்க் கடிவன முடிவன
வினவினுங் கடியசொல் வெம்பணை வீசியே
      வெகுளிமுட் சொரிகரு வேல்பல மிடையுமே.

(5)

   

64.

வன்கலா வதுகடுங் கயவர்தம் மனமதே
      மரமுமற் றவர்கணே வளரும்வல் லழலவர்
நன்கலா வுரைகளே சீறுசூ றாவளி
      நன்றிலா வவர்புரி நயமில்புன் றொழில்களே.

(6)
 

வேறு

 

65.

ஒருக்காலுங் கரையாத வுளமல்லாற் றிரைபொருநீர்ப்
பெருக்காலுங் கரைகின்ற பெருங்கல்லோ கருங்கல்லே.

(7)
   

66.

சலங்கிளருங் கொடுங்கயவர் தறுகண்ணே யவையன்றி
நலங்கிளரும் படிக்குதவு நன்மரமோ புன்மரமே.

(8)
   

67.

முருக்குகனன் மூர்க்கர்கொடு மொழியேமற் றுடலினைய
உருக்குகன லதுபோல வுயிரினையுஞ் சுடவற்றோ.

(9)
   

68.

சுழல்சூறை வளிநீசர் தொழிலேமற் றோரமயத்
துழல்சூறை வளியதுபோ லுலகுலையச் செயவற்றோ.

(10)
 

வேறு

 

69.

நன்கா டதனைச் சுடுகா டெனவே
      நவில்வீ ரறிவின் னடைகூர் பிணவெம

 

63. நொதுமலார் - அயலார். வேலி - முள்வேலி. பணை - கிளை. கருவேல் - ஒரு மரம் ; “வாளொத்த முட்சரித்து வறிதே காய்க்கும் வன்பாகுங் கருவேலை வளர்க்குங் கானம்” அஞ்ஞவதைப்.

64. நன்கு அல்லா உரைகள் ; பாசவதைப். 66, 68 ; “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்” (முத்தொள்ளாயிரம்) ; “கல்லுங் கயவோர் மனமேயவர்தங் கண்ணே மரமும் மவர்தண் மையறச், சொல்லும் முரையே சுடுதீ யிடர்சேர் சூறா வளிமற் றவர்தந் தொழிலே” (அஞ்ஞவதைப். ) ; “நெஞ்சங்கல்லாங், கண்ணிணையு மரமாந்தீ வினையி னேற்கே” திருவாசகம்.

66. சலம் - வஞ்சனை.

67. இனைய - வருந்த. அது போல - அந்தக் கொடுமொழிபோல ; “உயிரைச் சுடவல் லதுவெவ் வழலோ ஓரா விவர்தம் முரையன் றியுமே” அஞ்ஞவதைப்.

68. சூறைவளி தொழில் : பாசவதைப். 64. வற்றோ - வன்மையை யுடையதோ.

69. புகல்வீர் - சொல்வீராக. “செத்தபிண மிடுகாடு சுடுகா டென்று செப்புவர்க ளறியாதார் சிலர்தன் னெஞ்சத், தொத்ததுதா னுணராதுண்