| | | | புன்கா டதனைச் சுடுகா டெனவே புதல்வீர் புநிதர் புகுதா மையினே. | (11) | | | | 70. | அறியுந் நெறியா லறியா வறநூல் அறியும் மறிவோ ரறிவா னறையின் அறியுந் நெறியா லறியா நரர்வாழ் அவணே சுடுகா டழலும் மவையே. | (12) | | | | 71. | பொய்ந்நீ ரதெனத் தெளியா தணுகிப் புணரா சையெனும் பொறிமா னுகள மெய்ந்நீ ரதெனச் செலும்வாழ் வெனுமவ் வெண்டே ரடவி வெளியெங் கணுமே. | (13) | | வேறு | | 72. | கவர்த்த நெறியின கரக்கும் விடரின கறுத்த புறவின மிறுத்தவே உவர்த்த பயனின பொடித்த கிளையின உருத்த மறநிலை பெருத்தவே. | (14) | | வேறு | | 73. | ஓடியோடி வீடுதோறு முண்ணவுண்ண வெண்ணியே நாடிநாடி வாடுகின்ற ஞமலிகோடி கோடியே. | (15) | | | | 74. | ஒடுங்கவே படித்தநூ லுலம்பியே விதண்டையால் நடுங்கவே குரைத்துநின்ற ஞமலிகோடி கோடியே. | (16) |
டுடுத்து வாழு முயிரோடும் பிணம்பயில்கா டொழிய விட்டே” அஞ்ஞவதைப். பி - ம். ‘பிணம்வேம்’ ‘புகலீர்’ 70. அவணே - அவ்விடமே. அவை அழலும். பி - ம். ‘அறியாதனவாழ்’ 71. “பேராசை மான்செல்லச் செல்லப் போகும் பேய்த்தேரே யெம் மருங்கும் பெருகுங் கானம்” அஞ்ஞவதைப். 72. விடர் - வெடிப்பு. விட புருஷர்கள். புறவினம் - புறாக் கூட்டங்கள், புறம்பான இனம். மறம் - வேடச்சாதி, பாவம் ; சிலேடை. பொடித்த - உண்டான. 73. ஞமலி - நாய் ; “தருவர் தருவதில ரெனநினையு மனமொடே தமது தலைமைகெட வவரவர்கள் கடையிலே, ஒருவர் தருமுணவு கருதியுழல் பவையில்வே றுழலு ஞமலிகளு முளவுமல வுணரிலே” அஞ்ஞவதைப். 74. உலம்பி - முழுங்கி. விதண்டை - ஒருவகை வாதம். |