75. | செறிந்தவூ ழெனாதுசீறு சிறியரே சுணங்கன்மற் றெறிந்தகல்லை விட்டெறிந்த விளையரைச் சினப்பதே. | (17) | | வேறு | | 76. | வெஃகு கின்றவுயி ரென்ன முன்னணுகி மெல்ல மெல்லவதை விட்டுவிட் டஃகு கின்றதொடர் பற்றி றும்பலர் அரங்க மல்கிய சுரங்களே. | (18) | | வேறு | | 77. | செறிவற் றவர்தஞ் செறிவைச் சினவிச் சிறுமைத் தொடர்பைத் தினமுற் றருளும் அறிவற் றவர்தந் திருமற் றதுவேம் அழலுற் றணைய நிழலற் றதுவே. | (19) | | வேறு | | 78. | முழுதி யற்றுவா ரனைய ராயநன் முனிவர் பக்கலு முரண்மி குத்துவெம் பழுதி யற்றுவா ரிசைக ளேநெடும் பார்ப றிந்துநீள் வேர்ப றிந்தவே. | (20) | | வேறு | | 79. | எரியு மெரிபெயினு மிகலி யுடன்முழுதும் இரிய வரிபொழுது மிசையவே அரியு மரியுமெனு மபய முடையவரும் அழல வழல்வதுமவ் வடவியே. | (21) | | வேறு | | 80. | பிளவற்ற பேரருளைப் பிரியா தொன்றிப் பேரானந் தப்பரவை பெரிது மூழ்கும் அளவற்ற நீராரு மனல வெம்பி அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா. | (22) |
75. அரங்க - துன்பப்பட. பி - ம். ‘அரங்கண் மல்கிய’, ‘பலரங்கண் மல்கிய’ 77. செறிவு அற்றவர் - ஏகாந்திகள். செறிவை - சம்பந்தத்தை. பி - ம். ‘அதுவே யழலுற்ற’ ‘அனைய’ 78. இசைகள் - புகழ்கள். 79. அபயம் - அஞ்சாமை. 80. நீரார் - தன்மையையுடையவர், நீரையுடையவர். காந்தாரம் - காடு. |