பக்கம் எண் :

3. காடு பாடியது 15

81.

இந்திரனீ ழலின்வருண னிருப்ப மற்றும்
      இன்னமிர்த மிருப்பவுமிங் கெய்த வஞ்சி
ஐந்தருநீ ழலினொதுங்கி யந்நா டாள
      அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா.

(23)
 

 

 

82.

பணநாக வட்டவணைப் பாயன் மேவிப்
      பங்கயக்க ணெடுமாலும் பதைத்து நாரா
யணனாக வெந்துவெந்து கொதித்து வெம்பி
      அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா.

(24)
   

83.

தண்ணந்தா மரைப்பொகுட்டுத் தவிசி னேறித்
      தரணியிது முழுதளித்த தாதை வைகும்
வண்ணந்தா னிவ்வனத்தி னழலா லென்றால்
      மற்றினியே ததன்கொடுமை வகுப்ப தம்மா.

(25)
   

84.

விண்ணவர்க ளமரரென வறிந்துந் தம்மை
      வெய்யவிக்கா னகமஞ்சி மீது செல்ல
மண்ணவர்க ளடிதோயா தாகு மென்றால்
      மற்றினியே ததன்கொடுமை வகுப்ப தம்மா.

(26)
   

85.

பொன்னாடிக் கானகத்தி னனலால் வெம்பிப்
      பொரிந்துபொரிந் துருகிவிழும் புதுமை யாகும்
எந்நாடு மறியவிழு முற்கை யென்றால்
      இதன்மேலே ததன்கொடுமை யிசைப்ப தம்மா.

(27)

83. தாதை - பிரமதேவர். வண்ணம் - இயல்பு. ஏறி வைகும் வண்ணமென்க.

84. அமரர் - சாவாதவர். அவர்களுடைய அடி மண்ணைத்தோயாது.

85. பொன் நாடு இக்கானகத்தின். உற்கை - விண்வீழ் கொள்ளி.