45. | அத்திர விறையுரு வதுபரித் தவனியில் வகுமொரு பவனிபோய்ச் சித்திர நிலைமையி லும்மையும் தெருவினி லுய்த்தவர் திறமினோ. | (28) | | வேறு | | 46. | இம்மை யேகருதி வெம்மை யேபுரியும் எம்ம னோருமரு ளெய்தவே செம்மை யேயருளி யெம்மை யாளிறைவர் செல்வ மேவுமவர் திறமினோ. | (29) | | | | 47. | நல்ல தென்றிடினு நம்மை யாளுடைய நாய கன்றிறமி நானிலம் அல்ல தென்றிடினு மல்ல தொன்றுகன வதினு மேவலர்க டிறமினோ. | (30) | | | | 48. | அலைவி லாதபொரு ளதனொ டொன்றியது இதுவெ னாமையறி யாதறிந் துலைவி லாதவமு துண்டு பண்டைநினை வொருவு வீர்கடைக டிறமினோ. | (31) | | வேறு | | 49. | கருகும்படி நயனங்கொடு களவின்னும துயிரைப் பருகும்பொழு துருகும்படி படர்வீர்கடை திறமின். | (32) | | வேறு | | 50. | மருவு மநாதிப் பிறந்தையை வஞ்சித்து நீங்கி மனாதியும் பொருவு மிலானொடு கூடியே பொலிவுறு வீர்கடை திறமினோ. | (33) | | | | 51. | ஆவது மழிவது மடைவதும் அகல்வது மிகல்வது மருள்வதும் போவதும் வருவது மின்றிய பொருளை மணந்தவர் திறமினோ. | (34) |
45. அத்திர இறை உருவது பரித்து - நிலையற்ற தங்குதலையுடைய உருவத்தைத் தாங்கி. பி - ம். ‘அத்திறவிறை’ ‘தெரிவினி லுற்றவர்’ 50. அநாதிப் பிறந்தை - அநாதிகாலமாக வரும் பிறவி. மனாதியும் பொருவும் இலான் - மனம் முதலிய காரணங்களும் ஒப்பும் இல்லாதவன். |