பக்கம் எண் :

8 பாசவதைப் பரணி

38.

பிறப்பு மிறப்புமறப் பேதைமை விட்டகலப்
      பேச வொணாநிலைமைப் பெற்றியி னுற்றதிலே
மறப்பு நினைப்புமற வல்வினை யோலமிட
      மருவி விடாதுறைவீர் வளர்கத வந்திறமின்.

(21)
 

வேறு

 

39.

இறையி னிலையிஃ தெமது நிலையிஃ
      திருளு மலமுத லுறுபிணிக்
கறையி னிலையிஃ தெனவு மறிவுறு
      கலைவ லவர்கடை திறமினோ.

(22)
   

40.

உலகி னினைவற வமரர் பெறலற
      உருவ மதுகொடு மருவியே
அலகி னவமதை யறிய வுரைசெய
      அவச முறுமவர் திறமினோ.

(23)
   

41.

கரும மறுமுறை குறுகு மிறைகழல்
      கருது தொறும்விழி யுகுபுனல்
மரும முறவுடல் புளக மெழநிலை
      வழுவி விழுமவர் திறமினோ.

(24)
   

42.

உலகி னிலைமையு மளவில் சமயமும்
      உலைவில் வினைகளு முணரவவ்
வலகி னிலைமையு மொழிய மொழியுமொர்
      அமுத மயில்பவர் திறமினோ.

(25)
 

வேறு

 

43.

மனநினை வறுமிட நினையவும்
      வருமிரு வினைவலி மடியவும்
தனைநினை வறவது தழுவவும்
      தலையளி பெறுமவர் திறமினோ.

(26)
   

44.

நிகரறு மிறையுரு வதுகொடு
      நிலமிசை யுறுமுறை நினைதொறும்
புகரறு மருணெறி பகர்தொறும்
      புளகித மெறிபவர் திறமினோ.

(27)

39. கலை - நூல்.

41. மருமம் - மார்பு. புளகம் - மயிர் சிலிர்த்தல். “வளைதரு வினைகழல் வுறவரு ளிறையடி மருவுதொ றுளனுடல் புளகம தெறியவும் மலர்தரு குவளைக ளருவிகள் சொரியவும்” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘கருமமுறுமுறை’

43. மனம் நினைவறும் இடம் நினைதல் : “மனனு நினைவரு மிடமது நினையவும்” அஞ்ஞவதைப்.