| ஞான நாட்டம் பெற்றுடையீர் நகுபொற் கபாடந் திறமினோ. | (15) | | | | 33. | ஐயங் கழிய மெய்யருளும் ஐய னடியிற் செய்யன்பின் மையங் கழிய நீர் ததும்ப மலர்ந்த விழியீர் திறமினோ. | (16) | | வேறு | | 34. | உடலு முறுபொருளு முயிரு முமதுபுகல் உணர்மி னுணர்மினென வுருகவேழ் கடலு மலையுமென நிலவு சுகசலதி கனிவி னருளுமவர் திறமினோ. | (17) | | | | 35. | வளரும் விழைவுயர மனதி னிலைதொலைய வனச விழியினுயிர் பருகியே தளரு மளவினிலொ ரமுத மொழியுதவு தகைமை பெருகுமவர் திறமினோ. | (18) | | | | 36. | கொடிய பிறவிநிலை குலைய வுலகின்வரு குருசி லருளுததி குறுகியே நெடிய விழியருவி சொரிய நிரதிசய நிமல மணையுமவர் திறமினோ. | (19) | | வேறு | | 37. | இப்பொருண் மெய்ப்பொருளே யென்று குறித்துலகோர் எழுபிற விச்சுழலா திவையல தாயொளிரும் அப்பொருண் மெய்ப்பொருளே யறிமி னெனப்பகரும் அருள்வள ருந்தகையீ ரணிகத வந்திறமின். | (20) |
33. மை அங்கு அழிய ; மை - காம முதலிய குற்றங்கள் ; கண் மை யென்பது வேறு பொருள் ; “ஐய மொன்றுமற வாத கோனடியி னன்பொடொன்றியக மின்புற, மையழிந்திட மலர்ந்தி லங்குவிழி மல்கு வீர்கள்கடை திறமினோ” அஞ்ஞவதைப். 34. சுக சலதி - இன்பக் கடல். 35. விழியின் உயிர்பருகுதல் : “அளவு கண்டிட வரிய பங்கய நயனம் வந்தும தாவியைக், களவு கொண்டிட வுருகு கின்றவர் கனக நன்கடை திறமினோ” (அஞ்ஞவதைப்) ; “கண்ணாலுயி ருண்பீர்கடை திறமின்கடை திறமின்” மோகவதைப். 36. விழியருவி : “கருகு கலியின்வலி தொலைய வுலகின்வரு கருணை மலையினருள் பரவியே, பெருகு மதிசயமொ டுருகி யருவிசொரி பெரிய விழி யினவர் திறமினோ” அஞ்ஞவதைப். பி - ம். ‘நிமல மளையும்’ |