பக்கம் எண் :

6 பாசவதைப் பரணி

 

வேறு

 
27.

பூண்ட பணிகள் புறத்தவிழப்
      புளக மெறிய விளகியுளம்
நீண்ட விழிக ணீர்ததும்ப
      நேயத் தமர்வீர் திறமினோ.

(10)
 

 

 

28.

தரித்த கலையி னிலைகுலையத்
      தம்மை மறந்து தலைவரொடு
தெரித்த கலவி நலனுகர்வீர்
      செம்பொற் கபாடந் திறமினோ.

(11)
   

29.

தாளை யெண்ணித் தலைவரொடு
      சாரா தகன்று தணந்தநெடு
நாளை யெண்ணி யிரங்கிடுவீர்
      நன்பொற் கபாடந் திறமினோ.

(12)
   

30.

வென்றே புலனோ ரைந்தினையும்
      விருப்பும் வெறுப்பு மேவலராய்
ஒன்றே குறித்து விழித்துறங்கும்
      உபாயந் தெரிவீர் திறமினோ.

(13)
 

வேறு

 

31.

உலகம்விழித் ததினுறங்கி யுலகுறங்கு மதினொன்றி
இலகவிழித் துறங்கிடுவீ ரிடுகதவந் திறமினோ.

(14)
 

வேறு

 

32.

ஊன நாட்டம் பெற்றுடைய
      உலோகா தீத மொன்றேகாண்

 

27. பணிகள் - தொழில்கள், ஆபரணங்கள்.

28. கலை - வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. ஆடை ; “கலைகளை விட்டெறிவீர்” (அஞ்ஞவதைப்) ; “மெய்தழுவ வுங்கணிலை யுங்கலையும் வீழ்வுற விரும்பி யிறைமுன், கைதொழுது நும்மையு மிழந்துவிடு வீர்கடை திறந்திடுமினோ” மோகவதைப்பரணி.

இந்தத் தாழிசை ஒரு பிரதியில் இல்லை.

29. தாள் - பதம், முயற்சி. “முன் பிழந்த நாளை நினைந்து போத விரங்கு வீர்கடை திறமினோ” அஞ்ஞவதைப்.

30. விழித்துறங்கும் உபாயந்தெரிவீர் : “விழித்தே யுறங்கும் விளங்கி ழையீர்” (அஞ்ஞவதைப். ) ; “விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்” திருவிளை. 55 : 38.

31. மேல்தாழிசையின் கருத்தை விளக்கியவாறு.

32. ஊனக்கண்ணையுடைய உலகத்திற்கு அதீதமாகிய ஒருபொருளையே காணும்.