| வேறு | | 22. | கடல்கெழுநஞ் சோனக நாடியர் கடியபுலந் தாழ்பொறி யாயின அடல்கெழுநஞ் சாவக நாடியர் அருள்பெறவந் தேகடை திறமினோ. | (5) | | வேறு | | 23. | திருமணநா டியர்பிறவிச் சிறையினரா கலினமலத் தருமணநா டியர்விழைவுற் றணிவளருங் கடைதிறமின். | (6) | | | | 24. | பன்னடநா டியர்சனனப் பாவையரா வருண்மன்றிற் கன்னடநா டியர்குறுகிக் கருணையொடுங் கடைதிறமின். | (7) | | வேறு | | 25. | இருளு மின்றிய வொளியு மின்றிய இலது மின்றிய வுளது மின்றிய மருளு மின்றிய தெருளு மின்றிய வரமொ டொன்றியர் திறமினோ. | (8) | | வேறு | | 26. | மண்ணின்மறை யாதுநிறை வாரியமி ழாது வாடியெரி யாதெரியின் வாதமறை யாது விண்ணின்மறை யாதுமன மாதிபொறி மேவா மேலதனை மேவியணை வீர்கடைக டிறமின். | (9) |
22. நஞ்சோன் - நஞ்சைக் கண்டத்தில் உடைய சிவபெருமானை. அகம் நாடியர் - உள்ளத்தில் நாடுபவர்கள். கடிய - வன்மையையுடைய. புலம்தாழ் - புலன்களிற் சென்று தங்கும். பொறியாயின நஞ்சா அகம் நாடியர் - பொறிகளை விஷமாக நெஞ்சில் எண்ணுபவர்கள். சோனக நாடியர், சாவக நாடியர் என்பன தொனி. 23. அமலத்து அருமணம் ; அருமணநாடு என்பது தொனி ; நன்னூல், சூ. 272, மயிலை. 24. பல் நடம் நாடியர் - பலவகை நடனங்களை நாடுவார். சனனப் பாவையரா - சனனமாகிய கூத்தில் ஆடும் பாவையராக இருப்ப. கல் - கற்கும். நடம் - தாண்டவத்தை. கன்னட நாடு என்பது தொனி. பி - ம். ‘பாவையராலருள்’ 25. இன்றிய - இல்லாத ; நல்லூர்ப்புராணம், நைமிசப். 48, அக்கினி. 57. வரம் - மேன்மை. பி - ம். ‘இருளுமன்றிய’ 26. எரியின் எரியாது. அறையாது - வீசி அடியாது. “புனலி னமி ழாது ககன மிசை யூதை புகுத வசையாத பொருளதாய், அனலி னெரியாது படையி னழியாத வறிவை யறிவார்க டிறமினோ” அஞ்ஞவதைப். |