பக்கம் எண் :

4. பேய்களைப் பாடியது 17

93.

கூடியசிகை யினசிலவே குறுகியபறி யினசிலவே
மூடியசடை யினசிலவே முண்டிதமா வனசிலவே.

(8)
   

94.

கற்கலைதற் றுவசிலவே கந்தைபரிப் பனசிலவே
வற்கலைதற் றுவசிலவே வறிதினியங் குவசிலவே.

(9)
  

95.

கீளுடைசுற் றுவசிலவே கிளர்துவர்நீ வியசிலவே
கோளுடைசுற் றுவசிலவே கோவணவா டையசிலவே.

(10)
   

96.

வேத்திரக்கை யினசிலவே விண்டுபரிப் பனசிலவே
பாத்திரக்கை யினசிலவே பாணிவிரிப் பனசிலவே.

(11)
 

வேறு

 

97.

பலகற்றி யாவினையும் விலகுற்ற மூதறிஞர்
      பயில்வுற்ற பேரவையி னோடியே
சிலகற்றி யாவரொடு மலகற்ற நூலறிவு
       செவிமுட்ட வோதுவன கோடியே.

(12)
   

98.

அறிவற்ற நூல்பழகி யதனுக்கு ளேமுழுகி
      அமைவற்ற பேய்களுட னூடியே
செறிவற்றி யாவினையு மளவிட்ட தாகமிகு
      சிலுகிட்டு லாவுவன கோடியே.

(13)

93. பறி - தலையைப் பறித்தல் ; “தலைபறியே சமயங்க ளென்று தத்தம், தலைபறித்துச் சிலசமண்பேய் சாற்றல் போலும்” அஞ்ஞவதைப்.

“தண்டைப் பிடித்தசில சிகையைத் தரித்தசில சடையைப் பரித்த சிலவே, முண்டித்து விட்டசில முடியைப் பறித்தசில முசுவிற் பொறித்தசில பேய்” அஞ்ஞவதைப்.

94. கற்கலை - காவியுடை. தற்றுவ - இறுக உடுப்பன ; குறள், 1023. பரிப்பன - தாங்குவன. வற்கலை - மரவுரி.

பி - ம். ‘தத்துவ’

95. கீளுடை - கீளோடு கூடிய கோவணம் ; (திருவிடை. ழம். 7. ) துவர் நீவிய - துவரில் தோய்த்த ஆடையை உடையன.

பி - ம். ‘நீடிய சிலவே’

96. வேத்திரம் - பிரம்பு. விண்டு - மூங்கில். பரணி - கை.

97. பி - ம். ‘கற்றுமாவினையும்’

98. சிலுகு - சண்டை ; 100 ; “அலைகெட்டி ராதுபல தலைகெட்ட நூல் பழகி யதுமுக்ய மாகமிகவே, கலைகற்ற பேய்களொடு சிலுகிட்டு லாவுவன கரையற்ற பேய்களுளவே” அஞ்ஞவதைப்.