பக்கம் எண் :

18 பாசவதைப் பரணி

 

வேறு

 
99.

பதறித் தாநிதி தேடுவ பலகற் றாவன நாடுவ
      பணியற் றாருட னூடுவ பழியைத் தானனி சூடுவ
கதறத் தாமிக வோடுவ கடையிற் போயிசை பாடுவ
      கவலைச் சாகர மாடுவ கருவிப் பேய்பல கோடியே.

(14)
   

100.

சிலுகிட் டேவிழ மோதுவ தெருள்பற் றாதன வோதுவ
      தெருவிற் போய்நட மாடுவ திசைகெட் டேதடு மாறுவ
கலகத் தேமன மேவுவ கவடுற் றேயுரை பாவுவ
      கலைவிற் றேயுடன் மூடுவ கருவிப் பேய்பல கோடியே.

(15)
  

101.

தளைபட் டேமனை வாழ்விலே தளர்வுற் றீரென வேகியே
      தவமெய்ப் பாடுகள் பேசியே தடையற் றேமலர் வாளியால்
துளைபட் டேயுடல் யாவுமே துருவிப் பாயலின் மேவியே
      சுரதச் சாகர மூழ்கிவீழ் துறவிப் பேய்பல கோடியே.

(16)
   

102.

கணையொத் தேதம வேடமே கருதத் தான்வளை யாதுமா
      கடுமைத் தாய்வினை யாவுமே கரையுற் றேமறை வாகியே
துணையொத் தேவளர் சூதையே துரியத் தானமெ னாமுனோர்
      தொடர்புற் றேநனி தோயவீழ் துறவிப் பேய்பல கோடியே.

(17)
 

வேறு

 

103.

மனுவைத் தான்விழ வோதுவ மதிகெட் டேதலை மோதுவ
      வசனத் தானிலை பேசுவ வரைவற் றேபிற வேசுவ
தனுவைத் தாமென நாடுவ சகமெய்ப் பாலென நீடுவ
      தலைகெட் டேதடு மாறுவ சமயப் பேய்பல கோடியே.

(18)
   

104.

சாலத் தாமறி யாதன சாதித் தேயுல கோரவர்
      தாமுற் றேவிழ வோதுவ தாழ்தற் கேசில போதனை
ஞாலத் தாரெதிர் வாருமி னாடத் தானினி யேதுள
      நாவிற் காவன வார்கெனு ஞானப் பேய்பல கோடியே.

(19)

99. கடை - வாசல். கவலைச் சாகரம் : “கவலைச் சாகர நீச்சுக்குளே” (திருப்புகழ்) ; “கவலைக் காகர மாவன கடைகட் கேநட மாடுவ, கலைவிற் றேயுண வாவன கருவிப் பேய்பல கோடியே” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘பலதெற்றாவன’

100. கவடு - கபடு, வஞ்சனை.

101. தவமெய்ப்பாடுகள் - தவத்திற்குரிய உண்மைச் சொற்கள் ; பாடு - சொல்; “செய்யுமென் பாட்டில்” (நன். சூ. 340) ; தவத்தின் அனுபவங்களுமாம்.

பி - ம். ‘தளர்வுற்றேமென’

103. மனு - மந்திரம். “தமைமெய்ப் பாலுண ராதன தனுவைத் தாமென நாடுவ” அஞ்ஞவதைப்.