| வேறு | | 105. | மாணத் தாமறி யாவெறு வாதத் தான்மன மாதியை வாதித் தால்வரு மோகதி வாய்விட் டேயிவை யோதினம் நாணத் தார்செலு நாணுடை நாரிக் காவன போதியும் நாடிப் பூண்முலை தோய்கெனு ஞானப் பேய்பல கோடியே | (20) | | வேறு | | 106. | வெள்ளைகொண்ட மனத்தினரை மருட்டி மெல்ல வீட்டுலகங் காட்டுநர்போல் விரகாற் செம்பொன் கொள்ளைகொண்ட தம்பசியை நீங்க வாங்கிக் குருக்கொடுக்கும் பேயனந்த கோடி கோடி. | (21) | | | 107. | உடையார்முன் னில்லார்போ லேக்கற் றுங்கற் றுயர்ந்திலவா யெவற்றினையு முணர்ந்த வேபோற் கடையாகித் தலைகெட்டுத் தடுமா றுற்றுக் கண்ணிழந்துந் தமைமதிக்குங் கழுத நேகம். | (22) | | வேறு | | 108. | சுளியு மாறு பயனில கேட்பன தோற்ற மாற்றுஞ் சுகானந்த வாரியைத் தெளியு மாறு தெளிவிக்கு நன்னெறி செப்புங் காலைச் செவிடுக ளாவன. | (23) | | | | 109. | நண்பு பெற்ற குடும்பபா ரத்தினால் நாளிற் றூர்ந்த நயனில் பழந்துளை பண்பு பெற்றுயர் கேள்விச் சலாகையாற் பரிந்து தோட்கப் படாத செவியின. | (24) |
106. விரகால் - தந்திரத்தால். “கவலையுற்ற தம்பசியைத் தணிப்ப வேறோர் கதியின்மை யானறந்தாங் காட்டு வார்போற், குவலயத்தோர் பொருள்விரகால் வாங்கிக் கொண்டு குருக்கொடுக்கும் பேய்களொரு கோடி கோடி” அஞ்ஞவதைப். 107. “உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார், கடையரே கல்லா தவர்” குறள். 385. 108. “வறிய வான வுரைபல கேட்பன மாண்டு மீண்டினி வாரா வழியினைச், செறிய லான பொருள்க டெரிந்துரை செய்யு மெல்லை செவிடுகளாவன” அஞ்ஞவதைப். 109. “கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப் படாத செவி” (குறள். ) குடும்ப பாரம் : “குடும்பச் சுமை” 122. |