| | | 110. | பன்ன வன்னிய மாந்திறங் கூறவாய் பாழு டம்பெலா மாகிப் படிப்பன முன்ன வன்சர ணாம்புயம் போற்றியே மொழிய மற்றழி மூங்கைக ளாவன. | (25) | | | | 111. | வெல்லொ ணாதன வெம்பசி வீழ்த்தவே மெலிந்து சொல்லற வீழ்ந்துடல் சோர்வன சொல்லொ ணாதன பாவகங் காட்டவே துடிது டித்துத்தந் தொல்வாய் பிளப்பன. | (26) | | | 112. | நிலையி லாதன வாய்நிலை பெற்றபோல் நின்ற வேதெரிக் கின்ற விழியின தொலைவி லாத வதீத முணர்த்திடிற் றொடர்ந்து பார்க்கத் துறுங்குரு டாவன. | (27) | | | | 113. | பண்டு நாளையு மின்று மனைவர்க்கும் பாடி வீடு பயில்புறங் காடெனக் கண்டு நீலவெங் காச மறைத்திடக் காண்கி லாதுளே வீழ்ந்தவன் கண்ணின. | (28) | | | | 114. | முற்ற முற்றவுந் தம்புக ழேசொல முகடு முட்ட வளர்ந்து முரிப்பன குற்ற மற்றவ ருற்றவண் பெற்றிகள் கூறுங் காலைக் குறள்களே யாவன. | (29) | | | | 115. | நிறைவி லாத குறைவினை யெய்தியே நெற்றி யேற நிமிர்ந்திறு மாப்பன குறைவி லாத நிறைவினை யெய்தியே குலவ வென்னின்வெங் கூன்களே யாவன. | (30) |
110. பன்ன அன்னியம். உடம்பெலாம் வாயாகி. மூங்கைகள் - ஊமைகள். “வம்பு கூறி னுடம்பெ லாம்வெறும் வாய்க ளாகி வடித்தற்கு வல்லன, உம்பர் கோனடித் தாமரை போற்றிநின் றுரைக்க வென்னில்வெற் றூமைகளாவன” அஞ்ஞவதைப். 111. பாவகம் : “பாவ கத்தொன்றி லாதமை காட்டவே படப டத்துத் தம் பாழ்வாய் திறப்பன” அஞ்ஞவதைப். 112. “பொய்ம்மை யாகிமெய் போல விளங்கிய பொருடெ ரிக்கினற் புற்புதக் கண்ணின, மெய்ம்மையான பொருளை யுளத்தினின் மீண்டு பார்க்கின் வெறுங்குரு டாவன” அஞ்ஞவதைப். 113. பாடி வீடு - தங்கும் இடம். புறங்காடு - சுடுகாடு. காசம் - கண்ணுக்கு வரும் ஒருவகை நோய். 114. பி - ம். ‘உற்றவன் பெற்றி’, ‘குறட்களே யாவன’ |