116. | பறையி லார்புன் படிறர் பவனிபோய்ப் பார்க்க வோடிப் படரும் பதத்தின கறையி லாருருத் தாங்கி யுலாவுதல் காண்டல் வேண்டுழிக் கான்முட மாவன. | (31) | | | | 117. | இம்மை யன்றி மறுமையு நண்ணுமா றியம்பு நூல்கற் றினிதியங் காமலே செம்மை யன்றி விதண்டைக ளேபல செப்பு நூல்கற்றுத் தெற்றி நடப்பன. | (32) | | | 118. | கொல்லுங் கூற்றம் வருஞான்று காறுந்தம் கொடிய கும்பிக் குழிக்கிரை தேடியே கல்லுங் கானுங் கடலு மலைகளும் கடந்து தேய்ந்த கடியவெங் காலின. | (33) | | | | 119. | அரிய நீந்தி யகந்தொறுஞ் சென்றுசென் றைய மேற்றுணக் கையிரண் டுற்றன துரிய நீந்திச் சுகானந்த வீடுபோய்ச் சுதையெ டுத்துணச் சொத்திக ளாவன. | (34) | | | | 120. |
வம்பை யேயுளங் கொண்டுல கத்தவர் மருளு மாறு குருடு துழாவியே கம்பை யேடு கயிறு கவளிகைக் காட்சி காட்டுமோர் பொத்தகக் கையின. | (35) | | | | 121. | சிவனி லாத வுருவ மெடுத்தமை தேர்ந்து பாரந் திருவடி வைத்தில | |
116. பறை - புகழ் ; ஆகு பெயர் ; பறைதல் - சொல்லுதல், படிறர் - வஞ்சகர். படரும் - போகும். 117. தெற்றி - பிணங்கி ; சீவக. 972. 118. வருஞான்று காறும் - வரும் காலம் வரையிலும். கும்பி - வயிறு ; வழக்கு ; “வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த வானஞ் சென்று வரக்காலுடையன” அஞ்ஞவதைப். 119. சுதை - அமுதம். சொத்திகள் - முடம். 120. கம்பை - சுவடிகளின் மேலுள்ள பலகை ; கவளிகை - புத்தகம் இடும் உறை ; “கயிறுங் கம்பையு மேடும் பிறர்க்கொரு காட்சி போல்வரும் புத்தகக் கையின” அஞ்ஞவதைப். 121. இலாத உருவம் சிவன் எடுத்தமை ; என்றது அவர் குரு மூர்த்தியாக எழுந்தருளியதை. சிவன், சமன் : வகரத்துக்கு மகரம் எதுகையாக வந்தது ; “சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைக லெய்தின்றா லுலகே” குறுந். கடவுள். |