| சமனி லாத விருவினைக் காவடி தாங்கி நாளுந் தழும்புறு தோளின. | (36) | | | | 122. | ஓரி மைக்கு ளழிந்திடு மென்பதை உன்ன லன்றி யுலைத்துலைந் தேதினம் பாரி மக்க ளெனுங்குடும் பச்சுமை பரித்துப் பங்கி பறிந்த தலையின. | (37) | | | 123. | தேற்ற மென்கின்ற தொன்றுமி லாமையாற் சினந்தி யாரையுஞ் சீறிச் சுடுங்கொடு மாற்ற மென்கின்ற வல்லழல் புல்லியே வளர நாளும் வறண்டிடு நாவின. | (38) | | | | 124. | வழியி லாதவர் சொல்லிய சொல்லற வகுத்த வான்கரும் பெள்ளிமெய்ஞ் ஞானநல் விழியி லாதவர் சொல்லிய சொல்லெனும் வேம்பை நச்சி விரும்பிக் கடிப்பன. | (39) | | | | 125. | சோறுண் டுண்ணவங் கென்னி னவர்களைச் சுற்றி யுற்றவர் போலத் தொடர்வன பேறுண் டென்னினுஞ் சோறில்லை யாய்விடிற் பிரிந்து பாரா பிறகிட்டு நிற்பன. | (40) | | | | 126. | வாய்க்கு மோர்வெறுங் காடியே தாயினும் வாய்க்கு மாயின் வழுதுணை கல்லிலே காய்க்கு மோவெனக் கொம்புதோ றாயிரங் காய்க்கு மேயெனக் கட்டுரை செய்வன. | (41) | | | | 127. | பெற்றி யுற்ற சுகானந்த போனகம் பெற்றி ருந்தும் பிரிந்தே விடுப்பன பற்றி யுற்று வெறும்புற்கை யாயினும் பாடி யாடித்தம் பாழ்வாய் மடுப்பன. | (42) |
122. பாரி - மனைவி. பங்கி - மயிர். பி - ம். ‘பாரின் மக்கள்’ 123. தேற்றம் - தெளிவு. கொடு மாற்றம் - வன் சொல். 124. பி - ம். ‘வெம்மை நச்சி’ 125. பிறகிட்டு - பின் புறம் காட்டி ; “உண்ண லான விடந்தொறு மற்றவர்க் குற்ற நட்டவர் போலுற வாடுவ”, “பிண்ட மிட்டவர் தம்பிற கேஞஞ்ஞை பிஞ்ஞை யென்று பிதற்றித் திரிவன” அஞ்ஞவதைப். 126. வழுதுணை - கத்தரிக்காய். 127. புற்கை - கூழ். |