128. | வைய மெங்கு நொடி யொன்றிற் சுற்றியே வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டுலைந் தைய மெங்கு மெடுத்துண் டவாவெனும் அம்பு ராசி யழுந்திக் கிடப்பன. | (43) | | | | 129. | வான முற்றும் வயிறா விலாவிற வாரி வாரித்தம் வன்பில வாய்திறந் தூன மற்ற வுயர்கதி யீதென உண்டுந் தூரா வுதரக் குழியின. | (44) | | | 130. | கடிய வாகி நகையு முவகையும் காய்ந்து கொல்லுங் கடும்பகை யாயடும் கொடிய வாகிய கோபா னலத்தினாற் கொதித்த ழன்று கொளுந்து முகத்தின. | (45) | | வேறு | | 131. | உண்ண விட்டவகை தேடி வீடுதொறும் ஓடு மேயுருகி வாடுமே நண்ண விருநிதிகள் கோடி நாடுதொறும் நாடு மேமயலி னீடுமே. | (46) | | | | 132. | ஐந்து புலன்வழி யேகி யேநிறைய ஆரு மேநிலைமை சோருமே சந்து பலமுறை போகி மாயரதம் ஊருமே கசடு சேருமே. | (47) | | | | 133. | கள்ள மாகவுல கெண்ணு மாறுசடை கட்டு மேமரண மட்டுமே வெள்ள மாகவுல கெண்ணு மாறுபடை வெட்டுமே யரண முட்டுமே. | (48) |
128. அம்பு ராசி - கடல். “வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த வானஞ் சென்று வரக்கா லுடையன” அஞ்ஞவதைப். 129. தூரா உதரக்குழி : “தூராக் குழியைத் தூர்த்து” (திருவிடை. ழம். 7); “தூராச் சலதி தூரினுந் தூராப், படுகுழி யுதரம்” மதுரை ழம் மணிக்கோவை, 19. 130. கோபானலம் - சினமாகிய தீ ; குறள், 304. 132. சந்து - தூது. 133. கள்ளமாகச் சடைகட்டு மென்க. எண்ணுமாறு - மதிக்கும்படி. |