134. | ஊறி யேதுவர் பிடித்த வன்கலை உடுக்கு மேயுடை விடுக்குமே தூறி யேமுன் முடித்த சண்டைகள் தொடுக்கு மேபல வடுக்குமே. | (49) |
| | |
135. | நல்ல தென்றுலகு சொல்ல வேமிக நடிக்கு மேசொல வடிக்குமே வல்ல தென்றுலகு சொல்ல வேமறை வடிக்கு மேதலை வெடிக்குமே. | (50) |
| |
136. | கடிய குரன்ஞமலி யென்ன வந்தெதிர் கடிக்கு மேபல படிக்குமே கொடிய கொலையுழுவை யென்ன வந்துயிர் குடிக்கு மேயுரு மிடிக்குமே. | (51) |
| | |
137. | சோறு கண்டபொழு தேயெ முந்துதுடி துடிக்கு மேமன மடிக்குமே பேறு கண்டபொழு தேயெ ழுந்துமடி பிடிக்கு மேசுரை குடிக்குமே. | (52) |
| | |
138. | பந்த மீதுவிது முத்தி யென்றுசில பகுக்கு மேவினை தொகுக்குமே மந்த மீதுவிது தீவ்ர மென்றுசில வகுக்கு மேநய முகுக்குமே. | (53) |
| உவமை | |
| வேறு | |
139. | மனனாலு மொழியாலு மறியா வொன்றை வாக்காலே யறிவிக்கு மாட்சி யம்மா புனலாலே யனல்சுடுதல் போலும் போலும் போலாவேற் புனலிலெழுங் கனலே போலும். | (54) |
| | |
140. | ஏகாச மிட்டிறுமாந் திருந்து நல்வீ டினிதளிப்ப மெமக்குவீ டியற்று கென்றல் ஆகாச கமனமுனக் குணர்த்த விவ்வாற் றக்கரைக்கே செலுத்துகென வறைதல் போலும். | (55) |
134. தூறி - ஏசி.
136. உழுவை - புலி.
137. சுரை - கள்.
138. பி - ம். ‘தீர மென்று’140. ஏகாசம் - போர்வை ; “ஆகாச மிட்ட கைகள், ஏகாச மிட்ட மெய்கள்” (அருணாசலகவி) ; பிரபு. மாயை கோலாகல. 70.