பக்கம் எண் :

4. பேய்களைப் பாடியது 25

141.

அமலமுயிர்க் குயிராகி யகத்தில் வைக
      அதையாயுஞ் திறமறியா தலைந்த லைந்து
விமலமதை வெள்ளிடையே நாடுந் தன்மை
      விளக்கிருக்கத் தீத்தேடும் விரகு போலும்.

(56)
   

142.

வினை தொலைக்குந் திறந்தெரியா தருத்தி முற்றும்
      விளித்துப்பின் பொன்னெயிலின் மேவ நின்ற
புனைமயிற்பீ லிச்சமண்பேய் கடனீர் வற்றப்
      புகுந்துமீ னருந்தநின்ற பூஞை போலும்.

(57)
  

143.

வரல்புக்குச் செறிதலற்ற பொருளைத் தத்தம்
      மதியளவால் வகுத்தியம்பல் மத்த யானை
உரலொக்குஞ் சுளகுபெண்ணை மார்ச்ச னைக்கோல்
      உலக்கையொக்கு மெனக்குருடுற்றுரைத்தல் போலும

(58)
   

144.

விமலவுரு வெடுத்தெய்தி யுணர்த்துந் தன்மை
      விரகினொன்றுக் கொன்றிகலி விதண்டை சாதித்
தமலமது விதுவென்று தெரியக் கூறல்
      அந்தகருக் கந்தர்நெறி யறைதல் போலும்.

(59)
   

145.

குருமுகத்தா லன்றியுயர் ஞான நூறாம்
      கொண்டகொண்ட வளவையினாற் குறித்து நோக்கி
ஒருவர்முக மொருவர்பார்த் தியம்பா நிற்றல்
      ஊமைகளுக் கூமைமொழி யுரைத்தல் போலும்.

(60)
   

146.

முன்னைவினை யாலன்றிப் பயன்க ளிம்மை
      முயற்சியா லாகுமென மொழியும் பேய்கள்
உன்னின்மலர் வான்வருமென் றுரைக்கும் பேய்கள்
      உளவாயி னவற்றினையே யொக்கு மொக்கும்.

(61)

142. பொன்னெயில் - பொன்னெயில் வட்டம் ; சமவசரணமென இதனை ஜைனர் வழங்குவர்.

143. பெண்ணை - பனை. மார்ச்சனைக் கோல் - விளக்குமாறு. குருடு - குருடர்கள். “ஒளி தருநூ லோதிமுடி பொருளைக் காணா தோதியநூல் பலவுணர்ந்து பிணங்கும் பேய்கள், களிதரும்யா னையைக்குருடர் கையாற் கண்டு கண்டகண்ட வளவுகொடே கழறல் போலும்” அஞ்ஞவதைப்.

144. “அருவாய பரனுருவா யருள்வ தொன்றை யஞ்சாதே சில வளவை கொண்டு தாமும், குருவாகிச் சிலகுருப்பேய் கூறுந் தன்மை குருடர்க்குக் குருடர்நெறி கூறல் போலும்” அஞ்ஞவதைப்.