பக்கம் எண் :

  

5. கோயிலைப் பாடியது

 

சோலை

 
147.

சொற்ற பேய்கள்புகு மாறிலாத்
      தூய யோகநில யந்தனில்
உற்று வாழிறைவி வாழ்தரும்
      ஒளிகொள் சோலையுயர் சோலையே.

(1)
   

148.

பூமி நீரனலம் வாயுவான்
      புல்கி லாதிரவி சோமரும்
தாமி லாதுபர நாதனார்
      தாள்வி டாரினிதின் வாழ்வதே.

(2)
 

வேறு

149.

ஆறுகண் ஞானதி வாகர ராறுகள் வீறுத டாகமும்
      ஆசைகு ரோதமிவாதிய வாறு மிலாதவ ரருளரோ
ஊறுகளாவன வேறில வோதவொ ணாதொளி யாகிய
      ஊழிதொ றூழியுமேநுகர்யோகுயர் சாகையி னமுதமே.

(3)
 

வேறு

 

150.

உடலு மழலுற வுயிரு மழலுற
      உறுதி கெடவரு மிறுதிநாட்
கடலு நிகரல வெனமு னிலவுமொர்
      கருணை நிழறரு பொழிலதே.

(4)

147. சொற்ற - முன் சொன்ன. நிலயம் - கோயில். “போகாத துயர்மேவு பொல்லாத விப்பேய்கள் புகுமாறிலா, யோகால யத்துள் ளிருப்பா டிருச்சோலை யுட்சோலையே” அஞ்ஞவதைப்.

148. அனலம் - தீ. நாதனது தாளை விடாதவர். “ஆகாச நீர்பூமி யனல்கா லிரவிசோம ரவியாதுமூ, டேகாச தரநாத னடியார்கள் பயில்வார்க ளினிதாகவே” அஞ்ஞவதைப்.

149. ஆறு :  ஆசை, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன.