| சகள சிவம் வேறு | | 4. | நீரேந்து சடாடவியு நெருப்பேந்து கராம்புயமும் நெற்றிக் கண்ணும் காரேந்து கந்தரமு முடையபிரா னடிக்கமலம் கருத்துள் வைப்பாம். | (3) | | | | 5. | காரேந்து கந்தரமு நுதல்விழியும் புனற்சடையும் கனலு மேந்தாச் சீரேந்து சிவஞான தேசிகன்செந் தமிழ்மாலை சிறக்க வென்றே. | (4) | | திருமால் | | 6. | புவியனைத்துந் தனித்துண்டு போயுறங்கும் படியுறங்கிப் புரியும் யாக அவியனைத்து மமரருண வருளுதவு மொருமுதலுக் கன்பு செய்வாம். | (5) | | | | 7. | சகமனைத்துந் தனித்துண்டு தகையுறங்கும் படியுறங்கித் தற்சொ ரூபச் சுகமனைத்து நுகரவருள் சிவஞான தேசிகன்சீர் சொல்ல வென்றே. | (6) | | பிரமதேவர் | | 8. | இருவினையு முக்குணமு நாற்கதியு மைம்புலனும் இயற்றா நின்ற ஒருவினையு முகநான்கு முடையவனை முப்போதும் உளத்துள் வைப்பாம். | (7) | | | | 9. | புலமைந்துங் கதிநான்குங் குணமூன்றும் வினையிரண்டும் போக வாண்டு நிலமைந்துந் தொழவந்த சிவஞான தேசிகன்சீர் நிலவ வென்றே. | (8) |
4. கந்தரம் - கழுத்து. பி - ம். ‘கராம்புசமும்’ 6. புவியனைத்தும் தனித்துண்டு : “உலகந் தனித்துண்டவன் றொழுந் தாளோன்” (திருச்சிற். 132. ) யாகம் திருமால் வடிவென்பர் ; “எச்சனாந் துளவினானை” காஞ்சிப். தக்கீசப். 9. நிலம் ஐந்து - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகள். |