| விநாயகர் | |
10. | நால்வாயு மைங்கரமு மிருசெவியு முக்கண்ணும் நயந்து தூய பால்வாயு மெய்ஞ்ஞான போதனைகூர் மதகளிற்றைப் பணிதல் செய்வாம். | (9) |
| | |
11. | நான்மறையு மஞ்செழுத்து மிருபயனு மூவுலகும் நயப்ப மாயை தான்மறையும் படியுதித்த சிவஞான தேசிகன்சீர் தழைக வென்றே. | (10) |
| முருகக் கடவுள் | |
12. | அயிலேறு கராம்புயமு மருளேறு முகாம்புயமும் ஆடல் சான்ற மயிலேறு பதாம்புயமு மருவுமொரு முருகனையாம் வணங்கல் செய்வாம். | (11) |
| | |
13. | விண்ணேறு நெடும்புகழும் புவியேறு தண்ணளியும் மேவி யுள்ள எண்ணேறு சிவஞான தேசிகன்பா மாலையரங் கேற வென்றே. | (12) |
| சூரியன் | |
14. | புவிபரந்த புறவிருள்கள் புறந்தந்து போயிரியப் புணரி வந்து சவிபரந்த விரவிதனைப் பரவியன்பு விரவிமுன்பு தாழ்தல் செய்வாம். | (13) |
| வேறு | |
15. | நனிபரந்த வகவிருள்கள் புறந்தந்து போயிரிய ஞாலத் தெய்தித் தனிபரந்த சிவஞான தேசிகன்செந் தமிழ்மாலை தழைக வென்றே. | (14) |
| வேறு | |
16. | செயலைச் சிவஞான போதனைச் செயலுட் படவோதி யேர்தரு மயிலைச் சிவஞான தேசிகன் வளர்மெய்ப் புகழ்வாழி வாழியே. | (15) |
| | |
17. | கயிலைப் பதிவாழி வாழியே கனகச் சபைவாழி வாழியே மயிலைப் பதிவாழி வாழியே வளர்கச் சியும்வாழி வாழியே. | (16) |
10. பால் வாயும் - பகுதி பொருந்திய.
12. ஆடல் - ஆடுதல்.
14. சவி - அழகு, ஒளி.
16. செயலைச் செயலுட்பட ஓதி. மயிலை - மயிலம் ; இது மயிலாசலமெனவும் வழங்கும்.