பக்கம் எண் :

28

பாசவதைப் பரணி


 

கவிகை முதலியன

 
157.

கடிதெ ழுந்தொருங் கெல்லாந்தன் னுட்படக்
      கவித்து நின்ற கவிகை கருணையே
நெடிது சென்று திளைக்கும்வன் கேதனம்
      நிரும லானந்த நிரதிச யம்மதே.

(11)
 

வேறு

 

158.

வாய்மை யாகுமே தீபம் யாவையும்
      மற்றெ லாமணு குற்றி லாமிகச்
சேய்மை யாகுமே யிறைவி வாழ்தரும்
      சினக ரத்தினுக் கனக ருய்க்கவே.

(12)
 

பலிபீடம்

159.

அளவி லாதன வண்ட கோடிநூ
      றாயி ரங்களு மலகி லூழியும்
பிளவி லாதன வாகி நிற்பதோர்
      பிண்ட மேபலி பீட மாவதே.

(13)

 

சாதகர்கள் பலியிடுதல்

 

160.

பிறவி யாரறத் துறவி யார்பலர்
      பெரிய வன்பினிற் பரவி முன்புறும்
மறவி யார்நினை வாரு மேயற
      வன்ப லீகொடுத் தின்பு றூவரே.

(14)
 

வேறு

 

161.

தம்முரு விறையுரு வணைதலின் மிகுபொறை
      தருவது மிஃதல தொருபொரு ளிலதே
எம்முரு வுயிரென விம்முயி ரிதனையும்
      இனிதயில் கெனவடி யிடுபலி பலவே.

(15)

157. கேதனம் - கொடி.

158. வாய்மை தீபம் : “சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” குறள்.

159. “அண்ட கோடிநூ றாயி ரங்களோர், பிண்ட மாவிடும் பெரிய பீடமே” அஞ்ஞவதைப்.

161. “தமதுரு விறைவடி வுறுதலி னிதனிகர் தருவது மொருபொரு ளிலமிது தகவில, தெமதுயி ரெனினுமி தமுதுசெய் வதுகட னெனவடி தொழுதிடு பலிபல பலவே” அஞ்ஞவதைப்.