பக்கம் எண் :

5. கோயிலைப் பாடியது 29

162.

உறுவது முடல்பெறு முயிருறு வினையுள
      துணர்வுறி னுலகினி லொருபொருள் பிறிதிலம்
இறுமுறை யமுதுசெய் தனையெவை யெவைகளும்
      இனிதயில் கெனும்பலி யிவைபல பலவே.

(16)
 

ஆலமரம்

 
 

வேறு

 

163.

அமலை யம்பிகை பயிரவி திரிபுரை
        அபயை யந்தரி ம்ருகமத பரிமளை
    அருண மங்கலை யருள்வள ரயில்விழி
        அநகை சங்கரி யகிலமு முதவிய
விமலை சுந்தரி யடியவர் துயர்கெட
        விருது கொண்டரு ளுமைபரை யுறைதரு
    விளைவு தந்ததொர் வடமுள ததனிலை
        வினவி னண்டரு மறிவுற வரியதே.

(17)
  

164.

அகில வண்டமும் வயினொரு சிறுபுரை
        அடைய வுண்டுபி னளவறு புவனமும்
    அடியி லொன்றினி லமைவர நமையருள்
        அயனை யுந்தியின் மலர்மிசை யருளிய
முகில்க ருங்கட லறிதுயில் கொளுநெறி
        முறை ப யின்றது மதில்வரு மொருசினை
    முதிர்வின் மென்றளிர் நுனியினு ணுனியெனின்
        மொழிவ தெங்ஙன மதன்வளர் பணையையே.

(18)
   

165.

அலகி லண்டமு மதினொரு சிறுவிதை
        அளவு கண்டிட வரியது வெனினதன்
    அளித ருங்கனி யளவையை யுலகினில்
        அறிய நின்றவ ரெவரதை விடவதின்

 


162. பி - ம். ‘உயிருமோருறுவினை’

163. ம்ருகமதம் - கஸ்தூரி. அநகை - பாவமற்றவள். வடம் - ஆலமரம்.

164. முகில் - திருமால். பணை - கிளை. “அயனையுல கடையவரு மோருந்தி மாமலரின் அருளியறி வரியபர யோகொன்றி மாறுயில்கொள், சயனமென மொழிவதொரு தாழ்கொம்பின் மேவுசிறு தளிரினொரு தலை யினுனி யேயென்பர் சாகையையே” அஞ்ஞவதைப்.

165. “ஒருவிதையி னளவளவி லோரண்ட மாருமதி னுளகனியி னளவையினி யார்கண்டு கூறுவரே”, அஞ்ஞவதைப்.