| உலைவி றண்சினை பொறிவிரி பணகண உரகர் தம்பதி யெழுமையு முலவுல துலக மெங்கணு முருவின ததன்விழு துரையி றந்தது முணர்வினி லுணர்வதே. | (19) | | வேறு | | 166. | வசையின் மூவ ரதன்மிசை மன்னு மூச லாடியே விசையி னொன்றி னின்னமு மீள்வ ரல்லர் போவரே. | (20) | | | 167. | மாய்வி லாத வருளினான் மாற்றி னன்றி வல்விசை ஓய்வி லாத வூசன்மூவ ரூச லூச லல்லவே. | (21) | | வேறு | | 168. | வீழோட்டி மேனோக்கி மென்கவடு திசையோட்டிக் கீழோட்டி மலர்ந்தசிகை கிளர்வடமற் றவ்வடமால். | (22) | | | | 169. | ஆசையெனுஞ் சிறகுவிரித் தைம்புலமாங் கொடுங்கண்ணிப் பாசவலைப் பறந்துவிழாப் பறவையதிற் படிவனவால். | (23) | | | | 170. | தண்ணருளே திருவுருவாய்த் தாயாய்வந் தருள்செய்த அண்ணறிரு மேனியவ்வா லறிந்தவா றறைகுதுமால். | (24) |
166. “சடாதரனும், அரியுமல ரவனுமதி, லேநின்ற வூசன்மிசை அணையவரி னவர்கள்விசை போயன்றி மீள்விலரே” அஞ்ஞவதைப். 168. “மேனோக்கி வீழோட்டி விரிதிசையே கவடோட்டிக், கீழ்நோக்கிக் கிளையோட்டிக் கிளரவளர் வடமிதுவே” அஞ்ஞவதைப். 170. இனி அறைகுதும். பி - ம். ‘மேனியல்லால்’ |