273. | இன்னன்யா னின்னனிவன் யானெனதென் றெண்ணஞ்செய் துன்னுங்காற் சங்கற்ப வுயர்புரிசை சூழந்துளதால். | (6) | | | | 274. | தவாமன்னு ஞானவெரி தன்னாலுந் தெறலாகா அவாவென்னுந் தூறடர்ந்த வழுக்காற்று மிளையினதால். | (7) | | | 275. | மாறுபுரி வீரர்பலர் மருங்கமைய வறிவில்லா வேறுவமை போயவிருள் விளக்கிருள மிடைந்துளதால். | (8) | | | | 276. | காமனே முதலாய கடுந்தலைவ ருடன்கலந்த நாமவேற் றானைநிலை நான்முகமும் பரந்துளதால். | (9) | | | | 277. | செம்புலவீ ரருமஞ்சச் சினந்தெழுந்து பாய்ந்ததிரும் ஐம்புலமாந் தறுகண்மை யானையதி னானைகளால். | (10) | | | | 278. | ஏறாத நெடுவரையு மேறிநொடி வரைமீளும் மாறாத பேராசை வாம்பரியின் மறலினதால். | (11) | | | | 279. | நினைத்தபொரு ளதனையொரு நிமிடத்தி னடைவிக்கும் முனைத்தகதி விடயமெனு மூரிநெடுந் தேரினதால். | (12) | | | | 280. | முரணிவளை வெய்திடினு மொழியினொரு நொடிவரையிற் றரணிமுழு துஞ்சுழலுஞ் சக்கரமன் சக்கரமால். | (13) | | அஞ்ஞன் இயல்பு | | | வேறு | | 281. | அன்ன மாயா புரத்துக் கதிபதி என்ன வந்த விழுதை யரசனே. | (14) | | வேறு | | 282. | குற்றந் தன்வயிற் காணப் பிறர்குணம் குறித்து நோக்கக் குருடாகித் தன்குணம் உற்று நோக்கப் பிறர்பழி நோக்குழி உடம்பெ லாங்கண் ணுடையவ னாவனே. | (15) |
273. “சங்கற்ப மாமென்பர் சலியாத மதிளே” அஞ்ஞவதைப். 277. செம்புலவீரர் - செம்மையாகிய அறிவையுடைய வீரர்கள் ; என்றது ஞானியரை ; போர்க்களத்திலுள்ள வீரர் என்பது ஒரு பொருள். ஐம்புலமாம் யானை : பாசவதைப், 85. 278. நொடிவரை - நொடிப்பொழுதில். 279. நிமிடம் : “அரைநிமிட நேரமட்டில்” (திருப்புகழ்) “கருதுமொரு பொருளையொரு கணமளவி லடையவிகல் கடவுமவன் விடயரதமே” அஞ்ஞவதைப். 280. சக்கரம் - ஆணை. 281. “இந்திர னாகும் பிறரொருவ ரேதங் காணு மிடத்திலே” அஞ்ஞவதைப். |