கலாசாலையில் கற்பிக்கும் தொழில்பெற்றிருந்தமையால், மதுரைத் தமிழ்ச்சங்கத்து அக்கிராசனாதிபதியும் பாலவனத்தம் ஜமீந்தாரும் உத்தமகுண மேருவும் வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை எனக் கொண்ட பெருவள்ளலுமாகிய மகா-ரா-ரா-ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்களைக் கண்டு, நடந்தன உரைத்தேன். உடனே அவர்கள் கலாசாலையில் யான்பெற்றுவந்த ஊதியத்தை ஓராண்டுவரை வேலையின்றிப் பெறுமாறு ஆணைசெய்து அளித்ததூஉமன்றி இருநூறு வெண்பொற்காசும் பரிசிலாக அளித்தார்கள். அவர்கள் செய்த பேருதவியை யான் என்றும் மறவேன். பின்னர்ப் புதுக்கோட்டை மருங்குள்ள ஆலங்குடி சென்று சுதேசமருத்துவ நண்பர் ஒருவரிடத்து மருந்து உண்டுவருங்காலை நோய் தணியாது பின்னும் பெருகி ஆவி அகத்ததோ புறத்ததோ என்று ஐயுறுமாறு கிடத்திய அளவில், அதன்முன்னர் ஒருகாலத்தும் யான் கண்டும் கேட்டும் அறியாதவரும், ஆங்கில வைத்திய கலாநிபுணரும் இன்றும் ஆலங்குடியில் புதுக்கோட்டைத் தமிழ் நாட்டரசரது வைத்தியசாலையில் உத்தியோகம் பெற்றிருப்பவரும் இரக்கமே ஓர் உருக்கொண்டால் அனையாருமாகிய மகா-ரா-ரா-ஸ்ரீ வேணுகோபால நாயுடு அவர்கள் யான் படும்பாட்டைத் தாமே கேள்வியுற்று யான் அழையாதே என் மருங்கு எய்திப் பன்மருந்து உதவிச் சிற்சில உபாயத்தால் சின்னாளில் நடையுறச் செய்து நோயளவுதெரிந்து, இந்நோய் என்னால் போக்கப்படுவது அன்றாகலின், தஞ்சாவூர் ஜில்லா என்னால் போக்கப்படுவது அன்றாகலின், தஞ்சாவூர் ஜில்லா டாக்டர் லெப்டினென்ட்கர்னல் H.M. ஹக்கீம் I.M.S. துரையவர்கள் சமூகத்தில் தெரிவித்து வெண்பொற்காசும் பரிசிலளித்துத் தஞ்சையில் உய்த்தார்கள். அவர்கள் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிதன்றோ! பின்னர்த் தஞசை சென்று ஆங்கில வைத்திய கலாநிபுணர்களாகிய மகா-ரா-ரா-ஸ்ரீ J. மல்லன்ஸ் அவர்கள் மகா-ரா-ரா-ஸ்ரீ W.S. முத்துச்சாமி நாடாரவர்கள் இவ்விருவர் சகாயத்தால் அத்துரையவர்களைக் கண்டு என் பரிவு சொல்லி வேண்டக் கருணையங் கடலாகிய அத்துரையவர்கள் உடனே பிணி தீர்ப்பான் உறுதிகூறி, அவ்வாறே மும்மதிக்கு ஒருகால் மூன்றுமுறை கருவிகொண்டு சோதித்து அந்நோய் முற்றத் தீர்த்து என்னுயிரை எனக்கே பரிசிலாக அளித்துப் |