பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்11

பேருதவிபுரிந்தார்கள். அவர்களாலன்றோ நீங்குநிலையில் இருந்த என் உடல் இன்றும் உளதாயிற்று. இப்போதுள்ள உடலை நோக்கில் தந்தையும் தாயுமாயினார் அத்துரையவர்களே ஆதலின், இப்பாயிரவிருத்தி உரையை அந்நன்றியின் ஞாபக சின்னமாக அச்சிடுவித்தேன்.

யான் தஞ்சையில் பிணி நிவிர்த்திகருதி ஒன்பது திங்கள்காறும் வசித்துப் பொருள்முட்டுப்பாடு பெரிதும் உற்றேனாக அக்காலை மதுரையில் வசிக்கும் உத்தமபாளையம் மகா-ரா-ரா-ஸ்ரீ சோமசுந்தர முதலியாரவர்கள் இருபத்தைந்து வெண்பொற்காசும் திருமங்கலம் ஓவர்சியர் உத்தியோகத்திலிருக்கும் மகா-ரா-ரா-ஸ்ரீ கிருஷ்ணையரவர்கள் இருபத்தைந்து வெண்பொற்காசும் எனக்குப் பெரிய தந்தையார் குமாரர் சிரஞ்சீவி அலங்காரம் பிள்ளையவர்கள் இருபத்துநான்கு வெண்பொற்காசும் மகா-ரா-ரா-ஸ்ரீ கந்தசாமிக் கவிராயரவர்கள் இருபது வெண்பொற்காசும் உய்த்துப் பேருதவி புரிந்தார்கள். காலத்தினால் செய்த நன்றி ஞாலத்தின் மாணப்பெரி தாகலின் அவர்களையும் யான் என்றும் மறவேன்.

அக்காலை மேலுரைத்த வருவாயும் சாலாதாகவே, அரிமள நகரத்தில் ஸ்ரீலஸ்ரீ சுந்தரசற்குருநாத சுவாமிகள் அதிட்டானத்தில் வடமொழி தென்மொழிக் கலைக்கடல்களை நிலைகண்டுணர்ந்து ஞானமூர்த்தியாக நம்மனோர் உய்யுமாறு எழுந்தருளி வீற்றிருக்கின்ற ஸ்ரீலஸ்ரீ சிவானந்த சற்குருநாத சுவாமிகள் இயல்பானே அமைந்த கருணையால் யான் விண்ணப்பம் செய்யாமலே மகா-ரா-ரா-ஸ்ரீ இலக்கணமுத்துக் கவிராயரவர்களால் என் இடர் கேள்வியுற்று நூற்றுக்குமேலாய வெண்பொற்காசினை இருமுறையின் உய்த்தார்கள். அச்சுவாமிகள் புறத்துநோய் நீங்கப் பொருளுதவி செய்ததூஉமன்றி, நோய் தீர்ந்தபின்னர்த் தமது சந்நிதானத்தில் என்னை அழைத்து அகத்துநோயும் நீங்குமாறு பல நன்மொழி உபதேசமும் செய்து, யான் எழுதிய அளவு தொல்காப்பிய உரையினையும் கேட்டு ஆராய்ந்து, முற்ற எழுதிப் பின்னரே வெளியிடக் கருதிய எனக்கு, யாக்கை இளமை முதலாயின நிலையின்மையின் எழுத எழுத ஓர் ஓர் இயலாக வெளியிடலே தக்கதெனப் பல நியாயம்கூறி, அவ்வாறே செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். அம்மட்டோ அதுவரை எழுதிய உரையினை