பக்கம் எண் :

168பாயிர விருத்தி

உடைத்து. யானை கவளம் கண்ட மாத்திரையான் வாய் திறவாமல் பாகன் பல்கால் உபசரித்து அளித்த காலையே ஏற்றலின் வெஃகா உள்ளம் உடைத்து. பன்னாட்கு முன்னர் அறியாமல் ஒருவன் ஒரு தீங்கு இயற்றிப் பின்னர் அவன் பல நன்மை செய்தானாயினும் அத்தீங்கையே நினைந்து அவற்குக் கேடு சூழ்தலின் நடுவுநிலை இன்று. ஆன் ஏறு ‘நின்வலியில் குறைந்தாரது கைப்படற்க’ எனத் தன் தலைவன் தொழுவத்தினின்று துரப்பில், தன்னைத் தழுவற்கு எண்ணினோர் தன் தலைவற்கு நட்டாராயினும் பகைவராயினும் அப்பகுதி நோக்காது தன்னான் இயலுந்துணை இடர்ப்படுத்துப் போகலின் நடுவுநிலை உடைத்து.

இவ்வாற்றான் தன்னில் பெரியார் ஒழுகியாங்கு ஒழுகாமை முதலாய குற்றத்தைக் கிளி முதலாயின களைதலின் புறந்தூய்மை முதலாகிய அத்தன்மை ஆறும் உடையான் மாணாக்கன் என்பது பெறப்பட்டது.

இனிக் குரங்கு நீரில் படியாமையின் புறந்தூய்மை இன்று. தன் தாய் தந்தை வாழ்ந்த இடத்தே தானும் வாழ்தலின் அவ்வொழுக்கு உடைத்து. எரி தான் எத்தீயினின்று பிறந்ததோ அத்தீ நின்ற இடத்து இன்றிப் பிறிது இடத்துச் சேறலின் அவ்ஒழுக்கு இன்று. தான் யாண்டும் பிறிதொரு பொருளால் தன் இயற்கையாகிய சூட்டின் நீங்கித் தட்பம் காட்டாமையின் வாய்மை உடைத்து. விலங்கு கோவலனைப்போல் குற்றமின்றி அரசதண்டம் உற்றாரையும் இவர் குற்றம் உடையார் எனக் காட்டலின் வாய்மை இன்று. ஓர் அந்தணன் மரனில் தூங்கிக் காற்றான் வீழ்ந்த கணையால் இறந்த தன் மனையாளை வேடனே கொன்றான் என்று வழுதிபால் முறையிட்டாங்கு முறையிடில் குற்றம் இல்லாதாரையும் காலில் தளை பூட்டிச் சிறைசெய்து விசாரித்து உண்மை அறிந்த பின்னர்ச் சிறை நீக்கிப் பரிசிலும் அளித்தல் அரசற்கு உரித்தாகலின் அங்ஙனம் தன்னைப் பூண்டார் பின்னர்ப் பிரிசில் பெறினும் அழுக்காறு உற்றுக் கெடாமையின் அஃது இன்று. ஆயெருமை தனக்கு இரை குறை இன்றிக் கிடப்பினும் பக்கலுள்ள பிறவற்றிற்கு இரை அளிப்பின் அது கண்டு அவற்றை முட்டற்குச் செல்லும் ஆகலின் அழுக்காறு உடைத்து. பசி தீரில் பின்னும் இரையினைக் காவாயைின் வெஃகல் இன்று. ஆடு தன் பசிக்கு வேண்டளவு ஓரிடத்தே இரை உளதாயினும் பல பக்கலும் சென்று இரை கோடலின் வெஃகும் உள்ளம் உடைத்து. தன் பொறுமை