பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்169

நிலையினைத் தனக்குத் தீங்கு செய்தார்மாட்டும் நன்மை செய்தார்மாட்டும் ஒப்பக் கோடலின் நடுவுநிலைமை உடைத்து. தோணி ஒத்த பாரம் உறின் தன் இயற்கையில் நின்று, ஒவ்வாத பாரம் உறின் அவ்இயற்கையின் நீங்கிச் சாய்தலின் நடுவுநிலை இன்று.

இவ்வாற்றான் ஒழுக்கம் முதலாய குணத்தை எரி முதலாயின களைதலின் ஒழுக்கம் இன்மை முதலாய ஆறு குற்றமும் உடையான் மாணாக்கன் ஆகாதான் என்பது பெறப்பட்டது.

இனிச் சிறப்பியல்பாகிய கோடல் விகற்பத்துள் மேல் உரைத்த காரணத்தால் முதற் காரணவினை ஒன்றே உரைக்கற்பாற்று.

அவ்வினை ஆறு வகைப்படும்; என்னை?

1“யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
 சாந்துணையுங் கல்லாத வாறு.’’

என்றார் ஆகலின் விளையாட்டில் காலம் கழியாமல் பசித்தார் உணவை வேட்டாங்குக் கல்வியை வேட்டலும் அவ்வேட்கையோடு 2கற்றாரைச் சார்ந்தொழுக னன்று என்றார் ஆகலின் அவரைச் சார்ந்து அகலாமையும், அதனொடு 3உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாமையும் அதனொடு,

4“குணனடங்கக் குற்ற முளானு மொருவன்
  கணனடங்கக் கற்றானு மில்’’

எனவும்,

5“குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
  மிகைநாடி மிக்க கொளல்’’

எனவும்,

6“அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
  லின்மை யரிதே வெளிறு.’’

1குறள் 397

2நான்மணிக் கடிகை

3புறம் 123

4நாண்மணிக் கடிகை

5திருக்குறள் 504

6திருக்குறள் 503