பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்171

யானை கண்டன கேட்டன உற்றன பருப்பொருளாயினும் நுண்பொருளாயினும் அவற்றுள் ஒன்றாயினும் ஒரு சிறிதும் ஒரு காலத்து மறவாத் தன்மை உடைத்து. இதுபற்றியே புத்தி தத்துவத்தின் அதிதெய்வமாகிய கணபதி யானைத் தலை உடையான் எனப் புராணம் கூறியதூஉம் என்பது. அதுதான் அகத்துள் கொண்டவற்றுள் ஒன்றேயாயினும் பிறரும் உணருமாறு வாயில் கொணர்தலின்று.

ஆன்ஏறு தான் அகத்துள் கொண்டவற்றைப் பிறரும் உணருமாறு வாயில்கொணர்ந்து அசைத்தல் உடைத்து.

இவ்வாற்றான் கிளி முதலாயின குற்றம் களைதலின், அக்குணம் ஆறும் உடையான் மாணாக்கன் என்பது பெறப்பட்டது.

இனிக் குரங்கு, கோடு வாழ்வன பிற, கூடுசெய்து இனிதுவாழத் தான் அவ்வினை மேற்கொள்ளாமல் ஒரு கோட்டினின்று பிறிதொரு கோட்டில் பாய்தலும் இறங்கலும் ஏறலும் முதலாய விளையாட்டில் காலம் கழிப்பி மழையில் நனைந்து குளிரான் வாடி வருந்தல் உடைத்து. காய்கனி அளியாக் காலத்தும் தான் சார்ந்த மரச் சாலையை நீங்கல் இன்று.

எரி தான் சார்ந்த பொருளை அழித்து நீங்கல் உடைத்து. பசித்தார்க்கு உணவாகுமாறு நிற்றலின் உற்றுழி உதவலும் அந்தணர் அவி கொடுப்பின் அதனை வாங்கித் தேவர்க்குக் கொடுக்குமாறு அங்கியாதித் தன்கண் கொடுக்கும் என்பது வேத முடிபு ஆகலின் உறுபொருள் கொடுத்தலும் உடைத்து.

விலங்கு சிறைப்பட்டோர் தப்பியோட முயலின் விடாது தடுத்தலின் உற்றுழி உதவாமையும், அவரது பசி முதலாய துன்பம் கண்டு போக்காமையின் உறுபொருள் கொடுத்தலும் இன்று. சிறையாயினார் தன்னைத் தாம் போம் இடனெல்லாம் கொண்டு இழுத்து அலைத்து வருத்தினும் அதுபற்றித் தான் அவரை நீங்கல் இன்று.

ஆயெருமை பன்னாள் இரை அளித்து ஒருநாள் மறவியான் இரை அளியாவிடினும் அஃது ஒன்றே கருதிக் கட்டுத்தறியினையும் முறித்துத் தான் நின்ற நிலையை நீக்கிப் பிறிதிடம் செல்ல முயலல் உடைத்து. முன்னை நாளின் நொய்யும் நொறுங்கும் தவிடும் முதலாயவற்றுள் ஒன்று அளித்துப் பிற்றைஞான்று அது கொடாவிடின் அதனை நினைந்து பால் கறவாமையின் அதுபோல்வ சில சின்னாள் மறவாமை உடைத்து.