பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்173

அன்றி இயற்கை அறிவானும் ஆசானது குணம் குற்றம் காணல் கூடும் ஆகலின் அவற்றையே நல்லவை, நவை எனக் கூறினார் எனின், அது பொருந்துமாயினும் முன்னாகப் பின்னாக யாண்டாயினும் அக்கருத்தை உரையாமையின்  நல்லவை, நவை என்பன இப்பொருள் உடைய எனத் துணிவு இன்றி மயங்க வைத்தலானும் என்பது.

இன்னும் அவர் குழுவுபடூஉப் புறந்தரல் குஞ்சரத்து இயல்பு என்றார்; அது பொருந்தாது. என்னை? அஃது இல்வாழ்வானது தன்மையாகிய சுற்றம்தழால் ஆவதன்றி மாணாக்கனது தன்மை ஆகாமையின் என்பது.

அவர் பிறந்த ஒலியின் பெற்றி ஓர்ந்து உணர்தல் ஆன் ஏற்றின் செய்தி என்றார்; அதுவும் பொருந்தாது. என்னை? ஒலியின் பெற்றி உணர்தலின் ஆன் ஏற்றினும் சிறந்த அசுணமும் மானும் முதலாய பிறவற்றை விடுத்துச் சிறப்பில்லாத அதனைக் கூறல் ஆசிரியர் கருத்து ஆகாமையின் என்பது.

அவர் குரங்கெறி விளங்காய் எனக் கொண்ட பாடமும் அதன் தன்மையும் பொருந்தாமை மேற் கூறினாம்.

இன்னும் அவர் விலங்கி வீழ்ந்து வெண்ணீர் உழக்கிக் கலங்கல் செய்து அருந்தல் காரா மேற்றே என்றார்; அது பொருந்தாது. என்னை? சுனைநீர் முதலாயின விலங்கிவீழ்ந்து உழக்கினும் கலங்காமை யானும், கலங்கிய நீர் அருந்தினும் அதனால் எருமைக்குக் கேடு ஒன்றும் இன்றி விடாய் தீர்தலானும், ஆசான் தனக்குக் கேடு உறினும் அது கருதானாகி மாணாக்கனது கேடு இன்மையே கருதுவான் என்பது சுக்கிரனும் துரோணனும் தமக்குக் கேடு விளைதல் அறிந்தும் வியாழன் மகனுக்கும் துருபதன் மகனுக்கும் கற்பித்தமையால் உணரப்படும் ஆகலானும் என்பது.

இன்னும் அவர் ஒன்று இடையர் அரவு உறினும் குளகு சென்று சென்று அருந்தல் ஆட்டின் சீரே என்றார்; அதுவும் பொருந்தாது. என்னை? ஆடு சென்றுசென்று அருந்தினும் ஒன்று இடை அருந்தும் ஏனைய விலங்கு ஒப்பவே பசிதீர்தல் பயன்பெறல் அன்றி அதனால் அதற்கு ஒரு கேடும் இன்மை காணப்படலானும் நூற்றைவர்க்கு வீடுமன் பாட்டனும் கிருபன் துரோணன் முதலாயினாரினும் மிக்க