பக்கம் எண் :

174பாயிர விருத்தி

கல்வி உடையானுமாகவும், அவன்பால் கல்லாமல் அவர் கிருபன் மருங்கும் பின்னர்த் துரோணன் மருங்கும் கற்றாராகலானும், அவருள்ளும் அருச்சுனன் பின்னர்க் கைலாயபதியிடத்தும் கற்றான் ஆகலானும், சுகன் தன் தந்தை நிறைந்த கல்வி உடையனாகவும் அவன்பால் கேட்டவற்றான் ஐயம் நீங்காமையின் சனகனிடத்தும் சென்று கேட்டால் ஆகலானும், பலர்பால் சென்று வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை கடனாக் கொள்வது நன் மாணாக்கர் இயல்பு ஆகலானும் என்பது.

இனி அவர் நீரிடையன்றி நிலத்திடை ஓடாச் சீருடையதுவே தோணி என்றார்; அதுவும் பொருந்தாது. என்னை?

1“கடலோடா கால்வ னெடுத்தேர் கடலோடு
 நாவாயு மோடா நிலத்து.’’

என்றார் ஆகலின், எல்லாத் தன்மையும் முற்ற உடையது ஒரு பொருண் யாண்டும் இன்மையானும், அங்ஙனம் யாதானும் ஒரு தன்மை இன்மைபற்றி மாணாக்கன் ஆகாதான் என்று ஒருவனைத் தள்ளல் கூடாமையானும், கூடும் என்றாராயினும் தோணிபோலவே கடலோடாத நெடுந்தேரும் பிறவும் இருப்பத் தோணி என்று ஒன்றைச் சுட்டல் சிறப்பின்மையானும் என்பது.

இனி நன்னூலார் முன்னோர் உரைத்த அவ்உவமத்தியல்பு உணராது தாம் அவரினும் நுண்ணறிவு உடையார் எனக் கருதி அவர் கூறிய உவமத்தில் சில கொண்டு, சில தள்ளிச் சில கூட்டி ஒரு நெறிப்பட லின்றி,

2“அன்ன மாவே மண்ணாடு கிளியே
 யில்லிக் குடமா டெருமை நெய்யரி
 யன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.’’

என்றார்.

அதுவும் பொருந்தாது. என்னை? மேல் ஆசிரியனும் ஆசிரியன் ஆகாதானும் என அவர் தன்மையை இரு பகுதியாகக் கூறினார்க்கு ஈண்டு மாணாக்கனும் ஆகாதானும் என இரு பகுதியாக்கலே முறையாகல் அன்றி அவருள் மாணாக்கரைத் தலை இடைகடை என


1திருக்குறள் 496

2பொதுப்பாயிரம் 38