பக்கம் எண் :

180பாயிர விருத்தி

புறஉறுப்பாகிய பாயிரத்துள் அதன் அகஉறுப்பாகிய நூல் இயல்பு அடங்கும் எனல் பொருந்தாமையான் என்பது.

இனி முகத்தில் கண் காது முதலாயின அடங்குமாறுபோலப் பாயிரமாகிய முக உறுப்பின்கண் நூல் இயல்பும் ஏனை நான்கு வகையும் அடங்கும் எனின் அதுவும் பொருந்தாது. என்னை? கண் காது மூக்கு வாய் என அவை எல்லாம் கூடிய வழியே முகம் எனப்படுவதன்றிக் கண் முதலாயவற்றைத் தனித்தனிக் கூறியவழி முகம் எனப்படாதவாறுபோல அவர் கூறிய ஐவகைப் பொதுவும் பதினொரு வகைச் சிறப்பும் கூடியவழியே பாயிரம் எனப் பெயர்பெறல் வேண்டுமன்றி அவை தனிநின்ற இடத்தும் அப்பெயர் பெறுதலின் கூடாமையான் என்பது.

இனிச் சிறப்புப்பாயிரம் கூறலின் இலக்கணம் உரைக்கற்பாற்று.

அவ்இலக்கணம் என்னை எனின்;

1“பாயிரத் திலக்கணம் பகருங் காலை
 நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி
 யாசிரியத் தானும் வெண்பா வானு
 மருவிய வகையா னுவறல் வேண்டும்.’’

எனவும் தான் தற்புகழ்தல் தகுதியன்றே எனவும் கூறினார் ஆகலின், தன் ஆசிரியன் முதலாய மூவகையாருள் ஒருவனால் வெண்பாவானாயினும் ஆசிரியத்தானாயினும் அது கூறப்படும் என்பது.

இனி அம்மூவகையாரே அன்றி ஏனைப் புலமையோர் சிறப்புப் பாயிரம் செய்தற்கு உரியர் ஆகாமையும் பொதுப்பாயிரத்துக்கு அவ்வரையறை இன்மையும் என்னையோ எனின், சிறப்புப்பாயிரம் என்பது ஒரு நூலது பெருமையே கூறவந்ததாம் ஆகலின், அந்நூலது பெருமை விளங்குமாறு அதனை ஆக்கியோன் பெருமையும் அதனைக் கேட்போர் பெருமையும் அவர் காலத்து உடனிருந்து பழகினார்க்கு அன்றி ஏனையோர்க்கு உள்ளவாறு அறிதல் அரிதாகலானும், தந்தை முதலாயினார் அறியினும் அவர் புலமையோராய் இருத்தல் ஒருதலையென்று ஆகலானும், உள்ளவாறு அறிந்து


1தொல், பாயிரம், இளம்பூரணருரை மேற்கோள்.