பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்183

முறைப்பட எண்ணி என்பது = கற்று உணர்ந்தன முந்து நூலின்கண் முறை இன்றி விரவிக் கிடத்தலான் அவை முறையொடு பொருந்தி நிற்குமாறு கருதி என்றவாறு: புலம் தொகுத்தோன் என்பது = முந்து நூலின்கண் உள்ள அவ்இலக்கணங்களைத் தன் நூலுள்ளே தொகுத்துக் கூறினான் என்றவாறு; (அவன் யாவனோ எனின்) போக்கு அறு பனுவல் நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து என்பது = குற்றமற்ற நூலாராய்ச்சியினை உடைய மாற்றாரது நிலத்தைத் தன்னை அடுத்தார்க்கு நல்கும் திருவினை உடைய பாண்டியன் மாகீர்த்தி என்பானது அவையின்கண்ணே என்றவாறு: அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு என்பது = அறமே கூறும் நாவினகத்து நான்மறையும் முற்றப் பயின்ற அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்கு என்றவாறு: அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்பது = நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி ஒன்றனுள் பிறிதொன்று கலவாத மரபினையுடைய தனதுநூல் முறையைக் காட்டி என்றவாறு: மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தன்பெயர் தொல்காப்பியன் எனத் தோற்றி என்பது = அந்நூற் பெயரானே கடல் சூழ்ந்த நில உலகத்தின்கண் ஐந்திர வியாகரண நிறைய உணர்ந்த தன்பெயரைத் தொல்காப்பியன் என்று தோன்றச் செய்து என்றவாறு: பல்புகழ் நிறுத்த படிமையோன் என்பது = பல் புகழையும் ஆயாமை நிறுத்திய தவ ஒழுக்கத்தை உடையோன் என்றவாறு: தொகுத்தோனே படிமையோனே என்பவற்று ஏகாரம் அசைநிலை என்பது.

இனிப் ‘பொழிப்புத் திரட்டல்’ என்னை எனின், கண்ணழித்துக் கூறிய உரையினைத் திரட்டிப் பிண்டமாகக் கூறுதலே பொழிப்பாகும் ஆகலின், குற்றமற விளங்கி மயங்காத மரபினையுடைய தனது இயற்றமிழ் நூலிடத்துத் தான் தொகுத்த முறையினைப் பாண்டியன் அவையத்து அதங் கோட்டாசாற்குக் காட்டி, அவர் குற்றம் இன்மை ஆராய்ந்து நன்றெனக் கொண்டாமையானே அந்நூலின்கண் ஐந்திரம் நிறைந்த தன் பெயர் தொல்காப்பியன் என்று தோன்றச் செய்து பல்புகழ் நிறுத்த படிமையோன் அந்நூலை எவ்வாற்றான் கூறினானோ எனின், வடவேங்கடமும் தென்குமரியுமாகிய அவற்றை எல்லையாக உடைய நிலத்து வழங்கும் தமிழ்மொழியைக் கூறும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளும் என்று சொல்லப்பட்ட முதலாகிய அவ்விரண்டு இடத்துள்ள எழுத்தையும் சொல்லையும் பொருளையும் நாடிச் செந்தமிழ் இலக்கணம் நிரம்பிய நிலத்தாரொடு பயின்று, முந்து