பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்187

தென்திசைக்கண் பஃறுளி ஆறும் குமரிமலையும் கடலால் கொள்ளப்படாமல் எல்லாரானும் அறியப்பட்டுக் கிடந்தமையானும், வடக்கும் தெற்கும் பிற எல்லையும் உளவாக அவற்றைக் கூறாமல் எல்லாரும் உணர்தற்பொருட்டு மறைவின்றி நெடுந்தூரம் தோன்றற்பாலவாய மலைகளைக் கூறினார்.

கிழக்கும் மேற்கும் எல்லை கூறாமையின் கடல்வரைத் தமிழ் நாடன்றிப் பிறநாடு இல என்பதூஉம் அதனால் கடலே எல்லையாயின என்பதூஉம் பெறப்பட்டன.

இனி வடக்கின்கண் வேங்கடத்தைக் கூறினமையானே அதன் வடபால் ஆரியமும் தெற்கின்கண் குமரிமலையைக் கூறினமையானே அதன் தெற்கின்கண் கடல்வரை அக்காலத்து இலக்கண வரம்பு எய்தப் பெறாத தமிழ்ச் சிதைவும் ஆரியச் சிதைவும் ஆகிய பிறமொழிகளும் வழங்கின என்பது பெறப்படும். என்னை? வேங்கடத்தின் வடபால் ஆரியமும் தென்பால் தமிழும் வழங்கிய காரணத்தால், அவை வடமொழி தென்மொழி எனப் பெயர் பெற்றமையானும், குமரிமலையின் தென்கண் அசுரரும் இராக்கதரும் வழங்கிய பிறமொழிகள் உயர்ந்தோர் வழக்குடையதாகி இலக்கண வரம்பு எய்தப் பெற்றதாயின், தமிழொன்றே தென்மொழி எனப் பெயர்பெறல் கூடாமையானும் என்பது.

இனி இந்நூல் செய்தபின்னர்ப் பல்யாண்டு கழிந்த பிற்காலத்துத் தென்கடலின் வடபால் பிறமொழிகள் வழங்கிய நாட்டையும் அதன் வடபால் உள்ள குமரிமலையையும் அதன் வடபால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் ஆக்கிய பஃறுளி ஆற்றையும் அதன் வடபால் அவன் முன்னோர்முதலாகத் தொன்றுதொட்டு வளம் படைத்த எழுநூற்றுக் காவதப் பரப்புடைய நாற்பத்தொன்பது தமிழ்நாடுகளையும் அவற்றின் தலைநகரமாகிய தென்மதுரையையும் கடல் கொண்டது. பின் கபாடபுரம் பாண்டியார்க்குத் தலைநகரமாயிற்று. பல்யாண்டு கழியப் பின் ஓர் ஊழியில் கபாடபுரத்தையும் குமரி ஆற்றையும் இன்னோரன்ன ஆறு மலை பிறவற்றையும் அக்கொடுங்கடலே கொண்டது. அக்காலம் இடைச்சங்கம் இருந்து தமிழ் ஆராய்ந்த காலம் போலும் எனக் களவியல் உரையும் கூறிற்று. இவ்வாறு ஆசிரியர் காலத்தின்பின், பல்யாண்டின் முன்னர்க் காலவிகற்பத்தால் கடலுள் மூழ்கிற்று ஆகலின், அவர் தென்பால் எல்லையாகக் கூறிய குமரிமலை இக்காலத்துத் தோன்றாதாயிற்று.