பக்கம் எண் :

188பாயிர விருத்தி

இனி வடவேங்கடமும் தென்குமரியும் ஏழாவதன் தொகைகள். வேங்கடமும் குமரியும் செவ்வெண். அவை ‘ஆயிடை’ என்பதன்கண் உள்ள ‘அவ்’ என்னும் வகர ஈற்றுச் சுட்டுப்பெயராகிய தொகுதியை இறுதியில் பெற்றன. ‘அவ்’ என்னும் ‘வகர’ ஈற்றுப் பல அறிசொல் உயிர்மயங்கியலில் 1‘நீடவருதல்’ என்றதனான் முடியாது, ‘கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும்’ என்ற புறநடையான் முதல் நீண்டு யகரம் பெற்று ‘இடை’ என்னும் ஏழாவதனொடு புணர்ந்து ‘ஆயிடை’ என முடிந்தது. ‘அவ்’ என்பது ஆகுபெயரான் அவ் இரண்டனையும் எல்லையாக உடைய நிலத்தை உணர்த்திற்று. உலகம் என்பது நிலத்தையும் உயிரையும் உயர்ந்தோரையும் உணர்த்தும் பல பொருள் ஒரு சொல்லாயினும், தமிழ்கூறும் உலகம் என வினை அடுத்து நின்றமையான் உயர்ந்தோரை உணர்த்திற்று. உயர்ந்தோரா வார் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் ஆசிரியர் அகத்தி யனாரும் மார்க்கண்டேயனாரும் நாரதரும் நிதியின் கிழவனும் முதலாய தலைச்சங்கப் புலவரும் அவர் அனையாரும்.

இனி ‘வடவேங்கடம் தென்குமரி’ என்பது, கட்டுரைவகையான் வந்த சொற்சீரடி; ‘ஆயிடை’ என்பது வழி அசை புணர்ந்த சொற்சீரடி; ‘தமிழ்கூறு நல்லுலகத்து’ என்பது, குறைவு சீர்த்தாய சொற்சீரடி; இங்ஙனம் சொற்சீரடியை முன்கூறினார்; சூத்திர யாப்பிற்கு இன்னோசை பிறத்தல்பொருட்டு. என்னை? பாஅவண்ணம் சொற் சீர்த்தாகி நூற்பால் பயிலும் என்றலின். ஏனைய அடிகள் எல்லாம் செந்தூக்கு.

இனி வழக்காவது சிலசொல் பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற்று, என்று அறிய நிகழ்வது.

செய்யுளாவது, ஆசிரியர் செய்யுள்இயலில் கூறிய பாட்டு முதலாய அவ்ஏழ் நிலங்கள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது.

வழங்குமாற்றான் வழக்கு எனப்படுதலின் செய்யுளும் வழக்கு என்றதன்கண் அடங்கும் எனின், அஃது இயற்கையாகிய வழக்கினின்றும் எடுத்துச் செய்யுள் உறுப்பு முப்பத்து நான்கனுள் மாத்திரை முதல் வண்ணம் ஈறாக உள்ள இருபத்தாறு உறுப்பில் குறையாது மரபு நிலைதிரியா வேறுபாட்டான் ஒரு புலவனால் செய்யப்படும்


1தொல், எழுத்து. 208