பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்197

வழிநூலும் சேர்த்தல் என்னை எனின், முதல்நூல் என்னாது முந்துநூல் என்றமையானும், இவ்வாசிரியர் நூல்செயற்கு முன்னரே மாபுராணம் முதலாயின தோன்றினமையானும் என்பது.

இனி நல்லுலகம் எனற்குத் தலைச் சங்கப் புலவரும் அவரனை யாரும் எனவும், நிலம் எனற்குத் தென்மதுரைக் கழகத்திருந்த தலைச்சங்கப் புலவருள்ளும் சிலரே எனவும், ஆயிரு முதலின் எனற்கு அவ்விரு முதலானும் எனக் கூறாமல் அவ்விரண்டடித்துள்ள எனவும் உரைத்தவாறு என்னை எனின், எழுத்தும் சொல்லும். பொருளும் தலைச்சங்கத்துப் புலவரது வழக்கினும் செய்யுளினும் அவரனையார் ஆகிய முக்காலத்துப் புலவரது வழக்கினும் செய்யுளினும் உண்மையான், நல்லுலகம் என்புழி முக்காலத்துப் புலவரையும் உணர்த்துமாறு தமிழ்கூறு நல்லுலகம் எனக் காலப் பொதுமை உணர்த்தும் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டுக் கூறுமென்னும் எச்சம் புணர்த்தமையானும் நிலத்தொடு என்புழித் தலைச் சங்கப் புலவருள் இவ்வாசிரியர்க்கு முற்பட்ட இறந்தகாலத்துப் புலவரையே உணர்த்துமாறு, தமிழ்கூறும் என்றாற்போல முந்துநூல் கண்டு செந்தமிழியற்கை சிவணு நிலம் எனக் கூறாமல், முக்காலத்துப் புலவரது வழக்கினும் செய்யுளினும் காணப்படுவனவாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழியற்கை சிவணிய நிலம்என இறந்த காலமே உணர்த்தும் சிவணிய என்னும் எச்சம் புணர்த்தமையானும், வழக்கும் செய்யுளுமாய் இரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்பது1செய்யுண் மொழியாற் சீர்புனைந்து எனவும், 2இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் எனவும், 3ஓங்கிய மொழியா னாங்கன மொழுகி எனவும் நின்றாற்போல, ஆயிரு முதலானாடி என மூன்றாவது ஏலாமல் 4செய்யுண் மருங்கின் மெய்பெறநாடி எனவும், 5சொல்லிய மரபினிளைமை எனவும் 6மயங்கா மரபினெழுத்து எனவும் நின்றாற்போல, இன் சாரியை பெற்று முதலின் என நின்றமையால், பிறரது வழக்கும் செய்யுளும் மரபுநிலை திரிதல் இயல்பாகலின் மரபுநிலை திரியாது தலைச்சங்கப் புலவரும்


1தொல், பொருள், 549

2தொல், பொருள், 551

3தொல், பொருள், 555

4தொல், பொருள், 556

5தொல், பொருள், 582

6தொல், பொருள் பாயிரம்.